Saturday, May 21, 2016

இந்திய வரலாற்றில் முதல் முறையாக!

Image result for summer imagesஇந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக அளவிலான வெப்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது.
இதற்கு முன்பு 1956-ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் பதிவானதே மிக அதிகபட்சமாக இருந்தது.
கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் வட இந்தியாவில் பொதுவாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால், 50 டிகிரி செல்சியஸைத் தொடுவதும் அரிதாக நடக்கும் ஒன்று.
ஆனால், தற்போது 51 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையிலேயே மிக அதிகம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பி.பி. யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவிய சராசரி வெப்ப நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்ப நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
courtesylankasri

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval