Friday, May 27, 2016

குவைத்தில் இந்திய வெங்காயத்தின் விலை இந்திய மதிப்பு 5kg 140 ₹


Original file ‎ (1,600 × 1,067 pixels, file size: 345 KB, MIME type ...ஒரு டன் வெங்காயம் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ஒரு ரூபாய்: மகாராஷ்டிராவில் அவலம்
#
மகாராஷ்டிர மாநிலத்தில் தற் போது வெங்காய அறுவடை நடந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக வெங்காயம் எதிர் பார்த்ததை விட கூடுதலாக மகசூல் ஆகியுள்ளது.
#
தேவிதாஸ் பர்பானே என்ற விவசாயிக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறி யதாவது:
#
இரண்டு ஏக்கர் நிலத்தில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்து வெங்காயம் சாகுபடி செய்தேன். கடந்த 10-ம் தேதி, 952 கிலோ வெங்கா யத்தை 18 சாக்கு மூட்டைகளில் பிடித்து, லாரி மூலம் புணேவில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் துக்கு (ஏபிஎம்சி) அனுப்பி வைத்தேன்.
#
அங்கு, ஒரு கிலோ ரூ.1.60-க்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் 952 கிலோ வெங்காயத்துக்கு ரூ. 1,523.20 கிடைத்தது. இடைத்தரகர் ரூ.91.35-ஐ தரகாக எடுத்துக் கொண்டார். தொழிலாளர்களுக்கு ரூ. 59 மற்றும் ரூ. 18.55 கூலியாக கொடுக்கப்பட்டது. இதர செல வினங்களுக்காக ரூ. 33.30 கொடுக் கப்பட்டது.
#
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெங்காயத்தைக் கொண்டு சேர்த்த வாடகையாக லாரி டிரைவருக்கு ரூ. 1,320 கொடுக்கப்பட்டது.
#
எல்லா செலவுகளும் போக கையில் ஒரு ரூபாய்தான் மிஞ்சி யது. ஒரு கிலோ 3 ரூபாய்க்கா வது விற்பனையாகும் என எதிர் பார்த்தேன். ஆனால், இவ்வளவு குறைந்ததால் ஏமாற்றம் அடைந் தேன்.
#
நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து பயிர்களைப் பார்த்துக் கொண்டேன். கடும் மின்தட்டுப்பாட் டுக்கு இடையிலும் நீர் பாய்ச்சினேன். லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது போலிருக்கிறது.
#
வறட்சி பாதித்த பகுதிகளில் தினமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளைக் கேட்கிறேன். வெங்காய விலை இப்படியே சரிந்தால் என்னைப் போன்ற விவசாயிகளும் தற் கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்றார்
#
இதுல வேற நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 2 ஆண்டு மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம் எப்படி எல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் பாருங்கள்
#
பிரதமர் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் கார்பொரேட் முதலாளிகளின் எடுபிடியாய் ஏஜென்டாக உலகம் முழுவது சுற்றி அவர்களுக்கு சேவகம் செய்து ஆர்டர் பிடித்துக் கொண்டிருக்கிறார் விவசாயிகள் சாக வேண்டியதுதான்

ராம நாதன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval