கர்நாடக மாநிலம் பீதரில் பறவை காய்ச்சல் காரணமாக 35 ஆயிரம் கோழிகள் இறந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் ரமேஷ் குப்தா என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இங்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி 8 ஆயிரம் கோழிகள் திடீரென இறந்தன. இதே போல கடந்த 3-ம் தேதி 23 ஆயிரம் கோழிகள் இறந்தன. 20 நாட்களில் 35 ஆயிரம் கோழிகள் இறந்ததால் ரமேஷ் குப்தா கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் ரமேஷ் குப்தாவின் கோழிப் பண்ணைக்கு சென்று ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்தனர். போபாலில் உள்ள கால்நடை ஆய்வு மையத்தில் அந்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் கோழிகள் இறந்ததற்கு பறவை காய்ச்சல் ஹெச்5என்1 வைரஸ் தாக்கியது தான் காரணம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மஞ்சு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹம்னாபாத்தில் உள்ள கோழிப்பண்ணையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது கோழிப்பண்ணை யில் உள்ள 1. 5 லட்சம் கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதை யடுத்து பறவை காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்ட 1.5லட்சம் கோழிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழிக்கப்பட்டன.
இது தொடர்பாக கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் மஞ்சு கூறும்போது, “பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, பீதர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர்.
ஹம்னாபாத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புள்ள 1.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் முட்டைகளும் புதைக் கப்பட்டுள்ளன. ஹம்னாபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற் பனைக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது'' என்றார்.
இதனிடையே கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் பெங்களூருவில் கால்நடைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து யு.டி. காதர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பீதரில் பறவைக் காய்ச்சலால் மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டி ருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் கோழிகள் தீவிரமாக கண்காணிக்கப்படு கிறது'' என்றார்.
courtesy;the hindu
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval