கனடா நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாணவி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், மகபூப் நகரை சேர்ந்தவர் டாக்டர் ஜான் கிருபாவரம். இவரது மகள் சிந்தியா முல்லாபுடி (வயது 24). இவர் கனடா நாட்டில் வசித்து படித்து வந்தார்.
இந்த நிலையில், அங்கு ஸ்கார்பாரோ என்ற இடத்தில் விக்டோரியா பார்க் அவின்யுவில் உள்ள வணிக வளாகத்துக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்கு இவர் ஒரு காரில் மேலும் 3 பேருடன் சென்றிருந்தார்.
காரில் 2 பேர் இருந்தனர். 2 பேர் வணிக வளாகத்தினுள் சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு கார் நிறுத்துமிடத்துக்கு வந்து காரி
ல் ஏறினர்.
ல் ஏறினர்.
துப்பாக்கிச்சூடு
அப்போது அவர்கள் காரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஒரு ஆணை குறி வைத்து சரமாரியாக சுட்டு விட்டு, மற்றொரு காரில் தப்பி விட்டார்.
இதில் சிந்தியாவும், ஜோசப் அன்ஜோலோனா (26) என்பவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஜோசப் அன்ஜோலோனா, டொராண்டோ நகரில் வசித்து வந்ததாக தெரிகிறது. சிந்தியா, மர்காம் என்ற இடத்தில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தபோதும், காரில் இருந்த மற்ற 2 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
பின்னணி என்ன?
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காரில் குண்டு பாய வில்லை. எனவே மிக அருகாமையில் இருந்து குறி வைத்துதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த படுகொலையின் பின்னணி என்ன என்பது மர்மமாக உள்ளது.
வணிக வளாகத்தின் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
- See more at: http://www.canadamirror.com/canada/61865.html#sthash.BiU8vsyE.7dMxFOsy.dpuf
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval