Friday, May 13, 2016

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட பாஜக மத்திய அமைச்சர்: தடுத்த தமிழிசை!

Image result for cabinet ministers of india 2015தமிழக சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று போராடி வந்த தமிழக பாஜக, தற்போது சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 188 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைந்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வெறும் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இதை தொடர்ந்து பாஜக கூட்டணியிலிருந்து அனைத்து கட்சிகளும் பிரிந்தன.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே போல் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என பாஜக எண்ணியது. எனினும், பாஜக-வின் கனவு பலிக்கவில்லை,
இந்நிலையில், எப்படியாவது சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை வெற்றிபெற செய்து. தமிழகத்தில் ஒரு பிரதான கட்சியாக உருவேடுக்க வேண்டும் என பல மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில், அவரை ஆதரித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி வாக்கு சேகரிப்பு பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, மேடையில் ஸ்மிருதி இராணி மற்றும் தமிழிசைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர், அப்போது ஸ்மிருதி இராணி தொண்டர்களை நோக்கி, அதிமுக சின்னத்தை குறிக்கும் இரண்டு விரல்களை காட்டியுள்ளார்.
இதை பார்த்த தமிழிசை அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று போராடி வந்த தமிழக பாஜக, தற்போது சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 188 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைந்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வெறும் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இதை தொடர்ந்து பாஜக கூட்டணியிலிருந்து அனைத்து கட்சிகளும் பிரிந்தன.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே போல் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என பாஜக எண்ணியது. எனினும், பாஜக-வின் கனவு பலிக்கவில்லை,
இந்நிலையில், எப்படியாவது சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை வெற்றிபெற செய்து. தமிழகத்தில் ஒரு பிரதான கட்சியாக உருவேடுக்க வேண்டும் என பல மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில், அவரை ஆதரித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி வாக்கு சேகரிப்பு பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, மேடையில் ஸ்மிருதி இராணி மற்றும் தமிழிசைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர், அப்போது ஸ்மிருதி இராணி தொண்டர்களை நோக்கி, அதிமுக சின்னத்தை குறிக்கும் இரண்டு விரல்களை காட்டியுள்ளார்.
இதை பார்த்த தமிழிசை அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval