உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானத்தில் இணைக்கும் இந்தியா , அதை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்து விட்டது .
உலகிலேயே முதல்முறையாக போர் விமானத்தில் 3 டன் எடையுடைய ஏவுகணையை இணைக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது. இதன்மூலம், வான் வழித் தாக்குதலில் அதி சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவின் கை மேலும் ஓங்குகிறது. அதுவும் பிரமோஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது
உலகிலேயே முதல்முறையாக போர் விமானத்தில் 3 டன் எடையுடைய ஏவுகணையை இணைக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது. இதன்மூலம், வான் வழித் தாக்குதலில் அதி சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவின் கை மேலும் ஓங்குகிறது. அதுவும் பிரமோஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது
3 டன் ஏவுகணையை விமானத்தில் வைத்து எந்த நாடும் இது வரை சோதிக்க வில்லை , முதல் முறையாக இந்தியா தான் இதற்க்கு செயல் வடிவம் கொடுத்துள்ளது
இதன்மூலமாக, நிலம், நீர், ஆகாயம் என மூன்று நிலைகளிலும் வைத்து செலுத்தக்கூடிய சிறப்பம்சத்தை பிரம்மோஸ் ஏவுகணை பெறுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது . மேக் 2.8 என்ற அலகால் குறிப்பிடப்படும் வேகத்தை கொண்டது. பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் பணிகள் நடந்து வேகமாக வருகிறது
பிரம்மோஸ் ஏவுகணையில் அணு ஆயுதங்களை வைத்து செலுத்த முடியும். தவிர, சாதாரண வெடிகுண்டுகளையும் வைத்து செலுத்த முடியும். பிரம்மோஸ் ஏவுகணை எதிரி நாட்டு ரேடார்களில் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சிக்காத வண்ணம் மிகவும் தாழ்வாக பறந்து சென்று இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. எனவே, போர் என்று வரும் போது, பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
தற்போது நம் நாட்டு தரைப்படை மற்றும் கடற்படை , விமான படையில் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டு, சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் ஐ.என்.எஸ் கொச்சி போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது விமானப்படையிலும் சேர்க்கப்பட உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையை தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை சேர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், பிரம்மோஸ் ஏவுகணை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval