Saturday, December 26, 2015

ஏர்வாடியின் உண்மை நிலை என்ன ???

Notes From Nigeria: October 2010ஏர்வாடியை சார்ந்த சகோதரன் சரவணன் தமிழின் ஆய்வு கட்டுரை
ஏர்வாடியில் நடந்த கொலை சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு சங்பரிவார உறுப்பினர்கள் காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்து முஸ்லிம் மக்களிடையே கலவரம் செய்ய முத்துராமன் என்ற நபர் காவல்துறையினரால் வெளியூரில் இருந்து வந்து ஏர்வாடியில் குடியமர்த்தப்படுகிறார்..
75% இஸ்லாமிய மக்கள் வாழும் ஏர்வாடியில் இந்து முன்னணி ஆரம்பிக்கப்படுகிறது அருகே உள்ள கோவில் ரத வாசல் பொத்தயாடி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு RSS ல் இணைக்கப்படுகின்றனர்..
75% முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் கொண்ட ஏர்வாடியில் இந்து முன்னணி தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு முத்துராமனால் சரஸ்வதி பூஜை பெயரில் முஸ்லிம் தெருக்களில் ஆட்டோ ஊர்வலம் நடத்தப்பட்டு அச்சமூட்டப்படுகிறது ..
அந்த நேரத்தில் குமரி மாவட்ட பாஜக எம் பி பொன் ராதா கிருஷ்ணனின் உறவினர் ஜவஹர் பணியமர்த்தப்பட்டு ஆட்டோ ஓட்டுனர் முத்துராமனை ரவுடியாக வளர விடுகிறார்..
அப்போது காவலர்கள் உதவியுடன் ஏர்வாடி முஸ்லிம் இளைஞர் அசன் ரபீக் சூரயடி எனும் ஊரில் கொல்லப்பட்டு கிணற்றில் சடலம் சிதைக்கப்ட்டு மிதக்கிறது கடைசியில் அனாதை பிணம் என்று போலீசாரால் எரியூட்டப்படுகிறது..
பின்னர் மக்கள் அசன் ரபீக் காணவில்லை என கூறி புகாரளிக்க அந்த அனாதை பிணம்தான் ரபீக் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது .
சமீபத்தில் கிறிஸ்தவ நாடார் தெருவில் இந்து நாடார்கள் விநாயகர் சிலை வைத்து வழிபடும் தகராறில் தடையை மீறி பாஜக போலீஸ் உதவியுடன் முத்துராமன் விநாயகர் ஊர்வலம் வலுக்கடாடாயமாக முஸ்லிம் கிறித்தவ தெருக்களில் கொண்டு செல்லப்படுகிறது.
பின் சறிது நாட்களில் முத்துராமன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு உயிர் பிழைக்கிறார்.
போலீஸ் மக்களுக்குள் மோதல் ஏற்படுத்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் விடுகிறது.
பின் 2 மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் சாண்டா ஊர்வலத்தில்
முத்துராமன் மற்றும் இந்து முன்னணியினர் கிறிஸ்தவ மக்களை தாக்கி எஸ் பி வந்து பேச்சுவார்த்தை நடத்தும் போது குமரி மாவட்ட பாஜக வினர் ஒரு வேனில் வந்து ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பின் அங்கு ஆட்டோவில் வந்த ஹாஜா என்ற வாலிபரை கைக்குழந்தையுடன் இளம் பெண்னை சவாரி போகவேண்டும் என அழைத்து வந்து
சாந்தி நகர் அருகே அரிவாளால் சராமாரியாக வெட்டப்பட்டு இளம் பெண்னுடன் தப்பி செல்கின்றனர் போலீஸ் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆம்புலன்ஸ் இல்லாமல் தனியார் வேனில்
ஹாஜா வின் பிரேதத்தை அப்புறப்படுத்தி சாஜாவின் பெற்றோருக்கு விபத்தில் இறந்துவிட்டார் என தகவல் அளிக்கிறது.
கொதித்தெழுந்த ஊர் அனைத்து சமுதாய பொது மக்கள் சங்பரிவார் RSS அமைப்பினருடன் அசம்பாவித சம்பவங்களுக்கு துணை போகும் காவல்துறைக்கு எதிராக பிரேதத்தை வாங்காமல் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
இன்று அதிமுக திமுக மதிமுக நாம் தமிழர் விசிக மமக எஸ்டிபிஐ சிபிஎம் போன்ற கட்சி
மற்றும் ஏர்வாடி முஸ்லிம் கிறித்தவ இந்து பொதுமக்கள் சார்பாக 5000 பெண்கள் மற்றும் 4000 ஆண்களுடன் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் சங்பரிவார கும்பல்களை தடை செய்யவும் கோரி உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தினர்...
கடந்த 20 ஆண்டுகளாக சில மர்ம நபர்கள் மற்றும் காவல்துறை சூழ்சிக்கு பலியான மக்கள் ஹாஜா வின் மரணத்தில் ஒன்றினைந்தது மெய்சிலிர்க்க வைத்தது
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய முத்துராமன் ரமேஸ் ஜோதி மணி என்ற மணிஜீ செந்தில் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க சர்வ கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி - சரவணன் தமிழ் ஏர்வாடி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval