தர்பூசணி விதை:இதை படித்த பின்பாவது தர்பூசணியின் விதையை தூக்கி எறிந்து விடாதீர்கள். இவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு, காப்பர், மக்னீஷியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் மலட்டுத்தன்மையை போக்கும். இதயத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் இந்த விதையை இனியாவது வீணாக்காமல் உண்போம்.
தர்பூசணியின் வெள்ளைப்பகுதி:தர்பூசணியின் வெள்ளைப்பகுதியில் சிட்ரோனெல்லா என்ற சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள அமினோ அமிலம் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகின்றது. ஆகையால் சர்க்கரை நோய்க்கும், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.
வெங்காயத் தோல் மற்றும் பூண்டு பட்டை:வெங்காயத் தோல் மற்றும் பூண்டு பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. உடல் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஒவ்வாமையை குணப்படுத்தவும் இது பயன்படுகின்றது. இதை சமைக்கும் போது சேர்த்து, பின் பரிமாறும் போது எடுத்து விடவும். இதனால் உங்கள் உணவு மேலும் ஊட்டச்சத்து உடையதாக அமைகின்றது. இதை தூக்கிப் போடுவதால் சத்து மிக்க உணவை வீணாக்குகின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
உருளைக்கிழங்கு தோல்: உருளைக்கிழங்கு தோலில் எவ்வளவு சத்து உள்ளதை யாரும் அறிவதில்லை. உருளைக்கிழங்கின் மேட்புறத் தோலில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. இதோடு மட்டுமில்லாமல் இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் இதை சமைக்கும் முன் நன்றாக கழுவி பின் சமைத்தல் அவசியம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval