டுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 24ஆம் தேதி மிலாது நபி, 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன.
இந்த 3 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வி துறை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு 24, 25, 27, ஜனவரி ஒன்று ஆகிய தேதிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval