Wednesday, December 30, 2015

பற்களை வெண்மையாக்கும் புதினா

பற்
பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்…
• பல் துலக்கி வாயை கொப்பளித்ததும், புதினா பேஸ்ட்டை பற்களில் தடவி 2 நிமிடம் பிரஷ் செய்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்கவும், பின் மீண்டும் சிறிது புதினா பேஸ்ட்டை விரலில் எடுத்து, பற்களில் தேய்ப்பதோடு, 3 நிமிடம் ஈறுகளை மசாஜ் செய்து, வாயை நீரில் கொப்பளிக்கவும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.
• சுத்தமான மற்றும் கெட்டியான தேங்காய் எண்ணெயை பற்களில் தடவி பிரஷ் செய்து, 2 நிமிடம் கழித்து, உப்பு கலந்த நீரில் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி செய்வதன் மூலம், பற்களில் உள்ள கறைகள் நீங்குவதோடு, பற்களில் உள்ள சொத்தையும் நீங்கும்.
• வேப்பிலை பொடி 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடியில், சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களில் தடவி பிரஷ் செய்து வர, வாய் துர்நாற்றம், பல் வலி போன்றவை நீங்கும். குறிப்பாக இந்த முறையை கைவிரலால் பிரஷ் செய்வது நல்லது.
• ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஹைட்ரஜன் பெராக்ஸைடில், பேக்கிங் சோடா மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து, மாதம் ஒருமுறை பற்களைத் துலக்கி வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் வேகமாக அகலும்.
• பேக்கிங் சோடாவில் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, மாதத்திற்கு 2 முறை பற்களைத் துலக்கி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
• கல் உப்பு பல வாய் பிரச்சனைகளைச் சரிசெய்யும். அதற்கு கல் உப்பை தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து, பற்களை தடவி பிரஷ் செய்து வர, பற்கள் வெண்மையாக இருக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval