Friday, December 18, 2015

இந்த மழை எனக்கு கற்று கொடுத்தது…

2224_n
1. பேன் லைட்டு இல்லாம பழகிக்கணும்! எப்போதும் கரன்ட் இருக்கும்னு எதிர்பார்க்க கூடாது. கரண்ட் இல்லாம இருக்கவும் கத்துக்கணும். ஆற்காட்டார் நிறைய சொல்லி கொடுத்தும் நமக்கு புத்தியில்லே!
2.நீச்சல் கத்துக்கணும்! சென்னை எப்போதும் வறண்டு கிடக்கும்னு சோம்பேறியா இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் நீச்சல் சொல்லி கொடுங்க….. உதவும்.
3. எப்போதும் பால் பாக்கெட், கறிகாய், எல்லாம் புதுசா கிடைக்கும்னு நினைக்கக் கூடாது. ரேஷன் பொருட்கள் எந்த விததிலும் சோடை போனதில்லே! தரமான பொருட்கள் தான் கிடைகிறது!
4. பட்டினி இருக்க பழகிக்கணும், ரொம்ப உதவும்! இனிமே விரதம் இருக்க பழகிக்கோங்க. உடம்புக்கும் நல்லது, நாம இந்த மாதிரி நிலைமையில் இருந்தாலும் உதவும்!
5. வீட்டில் எப்போதும் இருக்க வேண்டியது செல் போன்,இன்டர்நெட் இல்ல…….. செல் டார்ச்சு, மெழுகுவர்த்தி, வத்தி பெட்டி எமெர்ஜென்சி விளக்கு தான்!
6. இண்டக்ஷன் ஸ்டவ் இல்லாட்டி கேஸ் அடுப்பு தான் உதவும்! எப்போதும் ஒரு வாரம் கேஸ் இருக்கிறா மாதிரி பார்த்துக்கோங்க. அதுக்கு மேல் ஆண்டவன் செயல்!
7. தண்ணீர் இல்லாமல் இருந்தால் கவலை படக் கூடாது. தண்ணீர் கேனை விட மழை தண்ணீர் ரொம்ப சுத்தமானது! நிறைய ஜீரகம் போட்டு காய்ச்சி குடிக்கலாம்.
8. கவர்மெண்டு மேலே குத்தம் சொல்லுறதை விடுங்க. அது ஏரின்னு தெரிஞ்சும் லஞ்சம் கொடுத்து ஏரிக்குள்ளே வீடு கட்டினது நம் தப்பே தவிர அவங்க தப்பு கிடையாது. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சம் இல்ல.
9. “லோ லெவல்” ன்னு சொல்ற தாழ்வான பகுதியில் வீடு இருந்தா…. எப்போதும் மேடை மாதிரி கட்டி அதிலே பொருட்களை வைக்கலாம்.
10. மழை வருதுன்னு தெரிந்தால்…. உடனே எந்த வித பயமோ பதட்டமோ இல்லாமல், சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி திட்டம் போட்டுக்கணும். நம் உயிர் நம் கையில் இல்லை…… அதுக்காக எதையும் திட்டம் போடாமல் இருக்க கூடாது.
11. மழை நல்லா பிடிக்கும் போதே ஏ.டி.எம்.ல் தேவையான பணத்தை எடுத்துக்கணும். சில்லறை பணம் நிறைய முக்கியம். செக் தாள்கள் மூலம் பணம் எடுக்கும் பேங்க்கிலே கணக்கை ஆரம்பிங்க. செக் தாள்கள் கேட்டு வாங்குங்க. தப்பே கிடையாது.
12. வெள்ளம் பாதிக்கும் பகுதியில் இருக்கும் மக்கள் மழைக்கு முன்னாடியே முடிஞ்ச வரைக்கும் முக்கியமான பத்திரங்கள், ஆதார், ரேஷன்கார்டு, மளிகை மாதிரி பொருட்களை உயரமான இடத்திலே பாதுகாப்பாக வைக்க பாருங்க.
13. கூடுமான வரையில் மழையிலே கார் இல்ல பைக்கு எடுத்துக்கிட்டு வெளியே போக வேண்டாம். அப்படி வேலையாக போனால் கூட சீக்கிரம் வீட்டுக்கு போய்டுங்க. வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வசதி இப்போ நிறைய ஐ டி கம்பெனியிலே இருக்கு. நாம பாதுகாப்பாக இருக்கிறது தான் முக்கியம்.
14. நீங்க எப்போ வெளியில் போனாலும்…. எந்த இடத்தில் எது எல்லாம் கிடைக்கும்னு தெரிஞ்சி வெச்சிக்கோங்க. வேலை விட்டு வீட்டுக்கு போக எத்தனை ரோடு, எத்தனை பாதை இருக்குன்னு தெரிஞ்சி வெச்சிக்கிறது நலம்.
15. கர்ப்பிணி பெண்கள் மழையிலே பாதுகாப்பாக இருக்க வேண்டும். ரொம்ப மழையிலும் வேலைக்கு வந்து தான் ஆகணும்னு எந்த முட்டா பயலும் சொல்ல மாட்டான். அப்படி சொன்னால் உங்களுக்கு அந்த வேலை வேணுமான்னு முடிவெடுக்க வேண்டியது உங்க கையில் இருக்கு.
16. பிளாட்கள், பெரிய வீடுகள் சோலார் தகடுகளை பயன்படுத்தலாம். சின்ன வெளிச்சம் இருந்தால் கூட கொஞ்சம் கரண்டு கிடைக்கும் வகையில் எல்லாம் சோலார் தகடுகள் வந்தாச்சு. அதுக்கு அரசு மானியம் கொடுக்குது. முடிஞ்ச வரையில் ஒரு மாற்று வழி.
17. பிளாட்டா இருந்தாலும் நம்ம அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களை தெரிஞ்சு வெச்சிக்கணும். எது அதிகமா கிடைத்தாலும் அதை பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா…. இந்த மாதிரி நிலைமை வந்தா… எப்படி ஒன்றாக இருந்து சமாளிக்கனும் என்று பிள்ளைகளுக்கு சொல்லி தரனும்.
18. கடைசியா ஒண்ணு! டிஸ்கவரி சானெல் பியர் க்ரில்ல்ஸ் நிகழ்ச்சி அடிக்கடி பாருங்க! நிஜமாவே எனக்கு அது தான் நிறைய கை கொடுத்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval