Wednesday, December 16, 2015

ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி: வீடுகள், சாலைகள் சேதம்!

sydny strom one
ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனைத் தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள், கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சாலைகளில் ஓடினர்.
சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் மற்றும் புறப்பட்டு செல்லும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிட்னி நகரில் இன்று மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீடுகள், கட்டடங்களின் கூரைகள் பறந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval