சென்னை; வெள்ள நிவாரணத்திற்காக பெங்களுருவிலிருந்து வந்த பல லட்ச மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர்கள் வீணடித்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நழுவி கடும் சிரமங்களை அனுபவித்துவருகின்றனர்.
அரசு மற்றும் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரும் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் அரசு முறையான நிவாரண உதவிகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரண பொருட்களை அமைச்சரின் பெயரை சொல்லி வீணடித்து அட்டகாசம் செய்துள்ளதாக வந்த தகவல் சமூக ஆர்வர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பெங்களுருவைச் சேர்ந்த பிரபல ஐ. டி நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து சென்னைக்கு பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை அமைச்சர் வளர்மதியின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அளிப்பதற்காக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அமைச்சர் வளர்மதியின் ஆட்கள் சிலர் அவர்களை தடுத்து “ எங்க அமைச்சர் வரட்டும் அவங்க வந்தபின் கொடுக்கலாம் எனக் கூறினர். மக்கள் அதுவரை பொறுக்கமாட்டார்கள் தன்னார்வலர்கள் தெரிவித்ததை அந்த கும்பல் ஏற்க மறுத்ததையடுத்து சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக தன்னார்வலர்கள் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து காலம் கடப்பதை உணர்ந்த தன்னார்வலர்கள் நிவாரணப்பொருட்களை மக்களுக்கு கொடுக்க துவங்கினராம்.
இதனால் எரிச்சலடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், அவர்களை தடுத்து மிரட்டியதோடு நிவாரணப்பொருட்கள் அனைத்தையும் தரையில் கொட்டியும் வெள்ளத்தில் வீசி எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் ஐ.டி ஊழியர்களும் தன்னார்வலர்களும் அங்கிருந்து திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.
வெள்ள நிவாரணத்தில் அரசு இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி இப்படி செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, இந்த தகவலை அமைச்சர் வளர்மதி தரப்பினர் மறுத்துள்ளனர்.
courtesy'vikadan
courtesy'vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval