சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசிய சுகாதார கருவிகள் மேம்பாட்டுத் துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பால் சுத்தமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மின்சார இணைப்பு கொடுத்து இந்த கருவியின் ஒரு பகுதியை பால் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பால் சுத்தமானதாக இருந்தால் அந்த கருவியில் பச்சை விளக்கு எரியும். பாலில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் சிவப்பு விளக்கு எரியும்.
இந்த கருவியை சென்னை மாதவரம் பால்பண்ணை உள்பட தனியார் பால்பண்ணைகளிலும் சோதித்து பார்த்தனர். அப்போது இந்த கருவி அங்கு உள்ள பால் சுத்தமாக இருந்ததாக காண்பித்தது.
இந்த கருவியை குறைந்த செலவில் கண்டுபிடித்துள்ளனர். இது நாடு முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval