Friday, December 25, 2015

ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??

22-1450770783-01
சார்ஜ் ஏற்றும் பொழுது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது என்று கேள்விபட்டிருப்போம்.
ஒரு பெண் தூங்கி கொண்டிருக்கும் போது சார்ஜில் உள்ள போனை பயன்படுத்தி வெடித்து சிதரியதை அனைவரும் கேள்விபட்டிருப்போம். இதற்கு காரணம் பேட்டரியின் அம்சங்களில் உள்ள இருக்கும் சில குறைபாடுதான். ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு தான். ஒன்று மோசமான பேட்டரி அல்லது ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாதது. இதில் எப்படி பேட்டரி வெடிக்கின்றது என்றும் அதை எப்படி நிறுத்துவது என்றும் காண்போம்.
தெர்மல் ரன் அவே
லித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும். இந்த பிரச்சனையால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிக்களை பாதுகாக்கவும், அதிக படியான சார்ஜிங்கை நிறுத்துவதற்கும் வழி முறைகளை கண்டுபிடித்துள்ளனர்.
தட்டையான பேட்டரிக்கள்
தற்பொழுது தட்டையான மெல்லிய ஸ்மார்ட் போன்கள் வருவதால் அவைகளுக்கு ஏற்ற மெல்லிய பேட்டரிக்களும் வருகின்றன. இதனால் positive மற்றும் negative தட்டுகளை தனிதனியாக வைக்க இடம் இருப்பதில்லை. இவைகளுக்கு இடையில் ஏதாவது நுழைந்தால் பிரச்சனைதான். அதிலும் தேவையான தரம் இல்லாத பேட்டரி என்றால் முற்றிலும் மோசம் தான்.
இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம்
பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் fuseஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.
ஒரிஜினல் பேட்டரியை பயன்படுத்தவும்
தயாரிப்பாளர்கள் போனுடன் வழங்கும் பேட்டரியை பயன்படுத்துவதை பழக்கமாக கொள்ளுங்கள். விலை கம்மி என்று நினைத்து கம்பனி அல்லாத மற்ற பேட்டரியை பயன்படுத்தினால் ஆபத்து உங்களுக்கு தான்.
வெப்பநிலை
அதிகம் வெப்பம் இருக்கும் இடத்தில் உங்கள் போனை வைக்க வேண்டாம். முக்கியமாக வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து சார்ஜ் ஏற்றக் கூடாது. அதிக வெப்பநிலை போனுக்கும் பேட்டரிக்கும் ஆபத்து தான்.
சார்ஜ் ஏற்றும் போது போனில் பேச வேண்டாம்
உங்கள் போன் சார்ஜில் இருக்கின்றது என்றால் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் அதிகமாக வெப்பம் தாக்க கூடிய அம்சம் கொண்ட பேட்டரியாக இருந்தால் அதிக வெப்பத்தினால் வெடிக்க கூடும். எனவே சார்ஜ் ஏற்றும் பொழுது போனில் பேச வேண்டாமே.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval