Wednesday, December 16, 2015

டேட்டா இல்லாமல் எதுவும் செய்யலாம்.!!

android-offlie-apps-644x373
உலகளவில் இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது சாத்தியமே இல்லை என்றளவு இண்டர்நெட் மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது என்றே கூற வேண்டும். வீட்டில் வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவது ஓரளவு விலை குறைவாக இருக்கின்றது என்றாலும், மொபைலில் டேட்டா பேக் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கின்றது எனலாம். இங்கு மொபைலில் இண்டர்நெட் இல்லாமல் பல்வேறு சேவைகளை வழங்க பல செயலிகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா.??
செய்திகள்:
தினசரி செய்திகளை படிக்க சிறந்த ஆஃப்லைன் செயலியாக ஃபீட்மீ இருக்கின்றது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
போட்காஸ்ட்:
உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை இண்டர்நெட் இல்லாமல் பார்க்க வழி செய்யும் செயலி தான் போட்காஸ்ட். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
கூகுள் மேப்ஸ்:
பயணம் செய்யும் போது வழி தெரியாமல் தொலைந்து விட்டால் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
டிரான்சிட் ஆப் :
பேருந்து மற்றும் ரயில் நேரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள டிரான்சிட் ஆப் உதவுகின்றது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
எஸ்எம்எஸ்மார்ட் :
இண்டர்ந்டெ் இல்லாமல் குறுந்தகவல் மூலம் செய்திகள், மேப்ஸ், ட்விட்டர் போன்ற சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ்மார்ட் செயலி தான் சிறந்தது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval