என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!”
கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…
நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!
நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.
நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே
நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘வீட்டுல சும்மாதானே இருக்கா… வேலையே செய்யாம’ என்று பேசுவது எத்தனை கொடுமை?
மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.
”நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?’ என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.
”ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் ‘நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?’ என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!
Dedicate To All Women's
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval