சென்னை மாநகரத்தை வெள்ளம் சூழ்ந்ததும், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்தனர் விமான நிறுவனங்களும் மக்களை சுரண்டியது ஒரு பேஸ்புக் பதிவு மூலமாக வெளியாகியுள்ளது.
அனுபம் ஆனந்த் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு இதோ...
சென்னை நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பலர் கஷ்டப்பட்டு பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அன்று திடீரென விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது. நான் ரூ. 22 ஆயிரம் கொடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லிக்கு டிக்கெட் வாங்கினேன். ஆனால், பொதுமக்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் விமான நிலைத்தில் காத்திருந்தனர்.
நான் விமாத்திற்குள் சென்று பாத்தபோது, பல இருக்கைகள் காலியாக கிடந்தன. நான் அவற்றை செல்போனில் படம் எடுத்தேன். பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று பலர் டெல்லிக்கு செல்ல துடித்துக் கொண்டிருந்த போது விமாத்தின் பல இருக்கைகள் காலியாக இருந்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல்பாடு மனிதத்தன்மை அற்றது.
இந்த விவகாரம் பிரதமர் அலுவலத்திற்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் சென்று சேரும் வகையில் இந்த பதிவை லைக் செய்யாமல், பகிர்ந்துகொளுங்கள். இந்த செயலில் ஈடுபட்ட ஸ்பைஸ்ஜெட் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval