ஒருவர் உடைய காலை தொட்டு வணங்கும் பொழுது உண்மையான மதிப்பு மரியாதையின் காரணமாக தொட்டு வணங்கவேண்டும் பயத்தினால் வணங்க கூடாது .
அந்த உண்மையான மதிப்பு மரியாதையை அதிபர் விக்டர் யுஷ்செங்கோ அவர்களிடம் இருந்ததை நான் நேரில் பார்த்தேன்.
இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பொழுது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் சென்றார் டாக்டர் அப்துல்கலாம் சார். அவர் உடன் நானும் நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் டாக்டர் கலாம் சார்.
அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மத்தியில் பேசினார். பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார், அறிவு சார் மன்ற விவாதங்களில் பங்கெடுத்தார் . அறிவியல் மற்றும் போதனை ஆராய்ச்சி மையம் ஒன்றை திறந்து வைத்தார் அப்துல்கலாம் சார்.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன் விருந்தளித்தார் உக்ரையின் அதிபர் விக்டர் யுஷ்செங்கோ . விருந்து நடந்து கொண்டிருந்த போதும் யாரும் எதிர்பாராத வகையில் உங்கள் காலைத் தொட்டு வணங்குவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று அப்துல்கலாமிடம் வேண்டினார்.
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று கலாம் சார் தடுத்தும் கூட கால்களைத் தொட்டு வணங்கிவிட்டார் விக்டர் யுஷ் செங்கோ .
ஒரு நாட்டின் அதிபரான விக்டர் யுஷ்செங்கோ, தனது பதவி அதிகாரம் எதையும் கருத்தில் கொள்ளாமல் கலாமின் காலைத் தொட்டு மரியாதை செய்தது ஏன்?
நான்கு நாட்களும் அப்துல்கலாமின் பயணத்தில் உடன் சென்ற விக்டர் யுஷ்செங்கோ .
இப்படியும் ஒரு மனிதரா ?
இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் இத்தனை எளிமையாக இருக்கிறாரே ?
விஞ்ஞானியா இவர்?
ஞானியாகத்தான் தெரிகிறார். என்று வியப்பின் எல்லைக்கே சென்று விட்டார் அதனால் தான் தனக்குச் சரியென்று பட்டதைச் செய்துவிட்டார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval