Wednesday, December 2, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

nobel prize

Image result for nobel prize images1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
23. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
24. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)


Aboo Bakkar
courtesy facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval