Saturday, December 12, 2015

2016ல் பேய் மழை பெய்யும், கடல்கள் கொந்தளிக்கும், உலகம் அழியுமாம்.. நாஸ்டிரடாமஸ் கணிப்பு.!

(12 Dec) பாரீஸ்: உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்ளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. சாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். "அமானுஷ்யம்" அறிந்தவர். அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம். 1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன.


உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் படபடப்பையும் இவை ஏற்படுத்தின. இந்த வகையில் 2016ம் ஆண்டு குறித்த இவரது கணிப்புகள்தான் இப்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

 நாஸ்டிரடாமஸுக்குப் பிறகு அப்படிப்பட்ட எந்த தத்துவ ஞானியையும் உலகம் கண்டதில்லை. அதே பிரான்சில் மேலும் பலரும் கூட கணிப்புகளைக் கூறி வந்த போதிலும் கூட நாஸ்டிரடாமஸுக்கு ஈடு இணையான ஒருவர் உலகளவில் எங்குமே இல்லை. தற்போது 2015 முடிவடைந்து 2016ம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த வருடப் பிறப்பு எப்படி இருக்கும், புது வருடம் எப்படி அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் நாஸ்டிரடாமஸ் 2016ம் ஆண்டுக்கான கணித்துள்ள சிலவற்றை இங்கு பார்க்கலாம். நாஸ்டிரடாமஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது. அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை. 2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். அதாவது இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்குமாம். ஏற்கனவே தமிழகத்தை பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. 2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை. 2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையுமாம். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியுமாம். பெரும் சேதத்தை இவை சந்திக்குமாம். மத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம். இன்னொரு பரபரப்புக் கணிப்பு என்னவென்றால் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம். ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டிரடாமஸின் இன்னொரு கணிப்பாகும். வெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். கிட்டத்தட்ட மத்திய கிழக்கு பற்றி எரிந்து வருவதை நாம் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஈராக், ஆப்கானிஸ்தானில் அமைதி போய் விட்டது - அங்கு அமெரிக்கா நுழைந்தது முதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016ல் நடக்கும் என நாஸ்டிரடாமஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் பகுதிகள் மூழ்கும் என்பது. உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இது மேலும் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும் என்று கணித்துள்ளார் நாஸ்டிரடாமஸ். ஏற்கனவே வட துருவத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறி வருவது நினைவிருக்கலாம். 2016ம் ஆண்டு இஸ்ரேலுக்குப் பேராபத்து வரும் என்பது நாஸ்டிரடாமஸின் இன்னொரு கணிப்பாகும். பல முனைகளிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுமாம். இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் படைகள் திரண்டு வந்து இஸ்ரேலைக் காப்பாற்றி விடுமாம். நாஸ்டிரடாமஸ் 2016ம் ஆண்டுக்கு கணித்துள்ள கணிப்புகளிலேயே இதுதான் கவலைக்குரியதாக உள்ளது.

அதாவது 2016ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் மயன் காலண்டரில் கூட இப்படித்தான் உலகம் அழியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கணிப்பு பொய்த்துப் போனது. நாஸ்டிரடாமஸ் சொன்னதும் நடக்குமா அல்லது பூமி பிழைக்குமா என்பதை 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: tamil.oneindia.com

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval