அரசின் நடத்தை விதிகளை மதிக்கும் வண்ணம் பதவியையும் இன்றே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்...!!
2015-ம் ஆண்டின் இறுதி நாளான இன்று, ராஜஸ்தான் மாநில மூத்த IAS அதிகாரியான 'உமாராவ் சலோடியா' இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது, ராஜஸ்தான் மாநில போக்குவரத்து துறை செயலாளராக உள்ள 1978-ம் வருட IAS பேட்ஜ் அதிகாரியான உமாராவ், 'தலைமைச்செயலாளர்' பதவிக்கான தேர்வில் முதல் இடத்தில் உள்ளார்.
இஸ்லாமிய வாழ்வியல் முறை தம்மை பெரிதும் ஈர்த்து விட்டதால், தான் முறைப்படி இன்றைய தினம் இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்துள்ள உமாராவ், இன்று முதல் தனது பெயரை உமாராவ் கான் என மாற்றிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
மதம் மாறுவது தனது அடிப்படை உரிமை என்றாலும், அரசின் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் முன்னுதாரணமாக செயல்பட விரும்பியதன் அடிப்படையில் இன்றைய தினமே தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார், உமாராவ்.
எனினும், உயரதிகாரி என்பதால், 3 மாத 'முன்னறிவிப்பு காலம்' என்ற அடிப்படையில் தான் 31-03-02016 வரை அரசு பதவியில் நீடிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார், நேர்மையான இந்த IAS அதிகாரி.
தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி ராஜஸ்தான் முதலமைச்சருக்கு இன்றே அனுப்பி வைத்து விட்டபோதிலும், 'சீனியாரிட்டி' அடிப்படையில் இடைப்பட்ட இந்த 3 மாதத்தில் தான் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அந்தப்பணியையும் சிறப்பாக செய்ய தயார் எனவும் அறிவித்துள்ளார், உமாராவ் கான்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval