Sunday, January 7, 2018

கொழுப்பு உணவுகளை சாப்பிடறீங்களா? சாப்பிட்டவுடனே இந்த மூலிகையை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!!

Things You Must Do After Eating High Cholesterol Food
கொழுப்புள்ள உணவுகளை சிறு வயதில் சாப்பிட்டதற்கும் வயது ஆக ஆக சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். 30 களின் ஆரம்பத்திலேயே செரிமானப் பிரச்சனைகள் மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கிறது. அசிடிட்டி வாய்வுப் பிடிப்பு என ஆரம்பித்துவிடும். இருப்பினும் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சிறு வயதிலிருந்து சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். இருந்தாலும் சில சமயம் நண்பர்களுடன் பார்ட்டி, விருந்து என வரும்போது கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் சிரிது பயம் தூக்கும். அஜீரண பிரச்சனை வந்துவிடுமோ என. ஆனால் என்ன சாப்பிட்டாலும் அதனை நேரத்திற்கு சாப்பிட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். என்ன மாதிரியான கொழுப்பு உணவுகள் என்றாலும் சரி, அதனை சாப்பிட்டதும் உடனடியாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். வெதுவெதுப்பான நீர் : எந்த வகைம் கொழுப்பு உணவுகள் சாப்பிட்டாலும் வெதுவெதுப்பான நீரை உடனடியாக குடித்துவிடுங்கள். இவை உங்கள் விரைவில் செரிமான சக்தியை தூண்டுகிறது. கொழுப்பு வேகமாக எரிக்கப்படுகிறது. நடை நீங்கள் உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக நடக்கலாம். 10 நிமிடங்கள் மெல்ல வாக்கிங்க் போனால் அமிலங்கல் சுரப்பது வேகமாகும். இதன் மூலம் கொழுப்பு உடனடியாக எரிக்கப்படுகிறது. தூக்கம் : கொழுப்பு உணவுகளை சாப்பிட்டதும் உடனடியாக தூங்கச் சென்றுவிடாதீர்கள். ஏனென்றால் இவை அஜீரணம் மட்டுமல்லாது பலவித நோய்களை தரும். கொழுப்புகள் செரிக்கப்படாமல் உடலில் அதிகமாகிவிடும். குளிர்ந்த பானங்கள் : நிறைய பேர் சாப்பிடதும் ஐஸ்க்ரீம் அல்லது கோக் போன்ற குளிர்பானங்கள் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மிகவும் தவறு. கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டதும் குளிர்ந்த உணவுகளிய உட்கொண்டால் அவை செரிப்பதை இன்னும் தாமதப்படுத்தும். கொழுப்பு உணவுகளை செரிக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள் : திரிபலா : கொழுப்பு உணவுகளை சாப்பிட்டபின் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானத்திற்குட்படும். வால் மிளகு : வால் மிளகு கொழுப்பு உடைக்கக் கூடியது. இதன் சூட்டுத்தன்மையாலும், காரமான தன்மையாலும், கொழுப்பு வேகமாக கரைக்கபப்டுகிறது. ஆகவே வால்மிளகுப் பொடியை 1/1 ஸ்பூன் அளவு மோரில் அல்லது நீரில் கரைத்து குடியுங்கள். தேன் : தேன் கிருமி நாசினி மட்டுமல்லாது எளிதில் செரிக்க வைக்கும் தன்மையும் கொண்டது. விரைவில் கொழுப்பை கரைகக் கூடியது. சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். கொழுப்பு உணவுகள் வேகமாக கரையும். குக்குலு : குக்குலு ஒரு ஆயுர்வேத மூலிகை. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை பெற்றது. உடல் பருமனானவர்கள் கூட இதனை சாப்பிடலாம். மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றி சாப்பிடுங்கள். கோமியம் : கோமியம் நிறைய மருத்துவ தன்மைகளைக் கொண்டது. நீங்கள் நம்புங்கள். உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சி தே நீர் : இஞ்சியை தட்டி தே நீர் செய்து கொழுப்பு உணவுகளை சாப்பிட்டபின் உடனடியாக குடிக்கவும். இது செரிமானத்தை தூண்டுகிறது. பொதுவாகவே கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை கொண்டது.

Read more at: https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/things-you-must-do-after-eating-high-cholesterol-food/articlecontent-pf119829-018958.html

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval