Tuesday, January 9, 2018

இத சாப்பிட்டா உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு எப்பவுமே வராது!

Sources Of Permanent Relief From Iron Deficiencyஉடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது சந்திக்கும் பிரச்சனை தான் அனீமியா என்னும் இரத்த சோகை. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடியதாகும். பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் இரத்த சோகையால் அவஸ்தைப்படுவார்கள். இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.
அதில் மிகுந்த களைப்பு, வெளிரிய சருமம், மூச்சு விடுவதில் சிரமம், அவ்வப்போது லேசான தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வேகமான இதயத் துடிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
யாருக்கு எல்லாம் இரத்த சோகை பிரச்சனை வர வாய்ப்புள்ளது?
* வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள்
*குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை கொண்டவர்கள்
* மாதவிடாய் சந்திக்கும் பெண்கள்
*கர்ப்பிணிகள்
* சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள்
* சில சமயங்கள் பரம்பரை
* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்
ஒருவர் இரத்த சோகை பிரச்சனைக்கு முறையாக சிகிச்சை பெறாமல் இருந்தால், அதனால் கருத்தரிப்பதில் சிக்கல், இதய பிரச்சனைகள் மற்றும் சில நேரங்களில் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடும். இங்கு இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடவும், இப்பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்கவும் உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி போன்றவற்றில் இரும்புச்சத்து மட்டுமின்றி, கர்ப்ப காலத்தின் போது தேவையான போலிக் அமிலமும் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த உணவுப் பொருட்கள் சுவையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவற்றை ஒருவர் அடிக்கடி தங்களது உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை வருவதைத் தடுக்கலாம்.
மாதுளை

மாதுளை

மிகவும் ருசியான மாதுளையில் இரும்புச்சத்து மட்டுமின்றி கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. அதோடு, இதில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. எனவே தான் இரத்த சோகை இருப்பவர்களை மாதுளை சாப்பிட சொல்கிறார்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இரத்த சோகை பிரச்சனையே வராமல் இருக்க வேண்டுமானால், மாதுளையை ஜூஸ் வடிவிலோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.
பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளுடன், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்தும் ஏராளமாக உள்ளது. இத்தகைய பேரிச்சம் பழத்தை ஒருவர் தினமும் 1-2 சாப்பிட்டு வந்தாலே, இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.
வெல்லம்

வெல்லம்

ஒவ்வொருவரின் வீட்டிலும் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வரும் பொதுவான பொருள் தான் வெல்லம். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு சீராக இருக்கும். எனவே அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் சர்க்கரைக்கு பதிலாக, சக்தி வாய்ந்த வெல்லத்தை சேர்த்துக் குடித்து வாருங்கள்.
தண்ணீர்விட்டான்

தண்ணீர்விட்டான்

இரத்த சோகை பிரச்சனைக்கு ஆயுர்வேத நிபுணர்கள் தண்ணீர் விட்டானை பரிந்துரைப்பார்கள். இந்த தண்ணீர் விட்டான் பொடியை பாலில் சேர்த்து கலந்து அடிக்கடி குடித்து வந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.
ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். குறிப்பாக இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 1-2 ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேன்

தேன்

தேனில் இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மாங்கனீசு போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளது. இரத்த சோகையால் கஷ்டப்படுபவர்கள், அன்றாட உணவில் தேனை சேர்த்து வந்தால், இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் இரத்த சோகையில் இருந்து எளிதில் மீள முடியும்.
வாழைப்பழம்

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை தீரும். இந்த முறை பழங்காலம் முதலாக நம் முன்னோர்களால் இரத்த சோகைக்கு பின்பற்றப்பட்டு வந்த ஒரு கை வைத்திய முறையாகும்.
பாதாம்

பாதாம்

உங்களுக்கு இரத்த சோகை உள்ளதா? அப்படியானால் 7 பாதாமை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி தினமும் சாப்பிட்டு வாருங்கள். அதிலும் காலையில் எழுந்தமும் வெறும் வயிற்றில் பாதாமை சாப்பிட வேண்டும். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
மூலிகைகள்

மூலிகைகள்

இரத்த சோகையை ஒருசில மூலிகைகளின் உதவியுடன் குணப்படுத்த முடியும். மூலிகைகளில் இரும்புச்சத்து மற்ற பொருட்களை விட அதிகமாக இருக்கு.
* 1/2 அல்லது 1 டீஸ்பூன் சுக்கங்கீரை வேர் பொடியை ஒரு நாளைக்கு 3 முறை உட்கொள்ள இரத்த சோகை சரியாகும்.
* சீமைக்காட்டு முள்ளங்கி வேர் காப்ஸ்யூலை தினமும் 2 சாப்பிட்டு வந்தாலும், விரைவில் இரத்த சோகை குணமாகும்.
* இல்லாவிட்டால், சீமைக்காட்டு முள்ளங்கி இலைகளை சாலட்டின் மேல் தூசி சாப்பிடவும் செய்யலாம்.
குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்துமே இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுவதோடு, ஒருவர் அன்றாடம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்தால், வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனை வராமலே தடுக்கலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval