Friday, January 12, 2018

இயற்கையான முறையில் உங்களது உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி?

25 வயதிற்கு பிறகு அதிகரிப்பது எப்படி?
நண்பர்கள் கூட்டத்தில் நாம் மட்டும் குட்டையாக இருப்பதை விட வேறு ஒரு கவலை என்பது இருக்கவே முடியாது. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீ குட்டையாக இருக்கிறாய் என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.. என்ன தான் நண்பர்கள் முன்னிலையில், சிரித்துக் கொண்டாலும் நம் மனதிற்குள் இந்த உயரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். உயரமாக தெரிய வேண்டும் என்று நாம், நம்மை உயரமாக காட்டும் உடைகளை அணிவோம், அல்லது ஹீல்ஸ் செருப்புகளை அணிவோம்.. ஆனால் இயற்கையாகவே நமது உயரத்தை அதிகரிக்க முடியுமா என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இந்த பகுதியில் இயற்கையாக உங்களது உயரத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி காணலாம்.
உயரத்தை அதிகரிக்க முடியுமா? ஒரு சிலர் 25 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுகின்றனர். இது உண்மை தானா? இது முற்றிலும் உண்மை கிடையாது. நாம் 21, 22 மற்றும் 25 வயதுகளில் கூட நமது உடல் எடையை அதிகரித்துக் கொள்ளலாம். நீங்கள் உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய பயிற்சிகளை தினமும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். உயரம் ஏன் அதிகரிப்பதில்லை? உயரம் என்பது பெண்களை பொருத்தவரையில் 18 வயது வரையிலும், ஆண்களை பொருத்தவரையிலும் 24 வயது வரையிலும் அதிகரிக்கிறது. இந்த பருவத்தை அவர்கள் கடந்ததும், உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் மெல்ல மெல்ல மெதுவாக செயல்பட ஆரம்பிக்கின்றன. வளர்ச்சியானது HGH, தைராய்டு ஹார்மோன்கள், இனப்பெருக்க ஹார்மோன்கள் போன்றவற்றை சார்ந்ததாகும். 25 வயதிற்கு பிறகு அதிகரிப்பது எப்படி? 25 வயதிற்கு பிறகு உயரத்தை அதிகரிப்பது எப்படி என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்க தான் செய்யும். இந்த வயதிற்கு பிறகு எலும்புகளின் வளர்ச்சியானது நிறுத்தப்படுகிறது. இருந்தாலும் சில வழிகளின் மூலமாக குறைந்தது சில இன்ஞ் வரையாவது நாம் வளர முடிகிறது. அதற்கு நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். டயட் சத்தான காய்கறிகள், மற்றும் பழங்களை சாப்பிடுவது என்பது உங்களது ஹார்மோனை தூண்டும். எனவே உங்களது டயட்டில் இவைகளை சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், அயோடின் மற்றும் மெக்னீசியம் போன்றவை உங்களது உயரத்தை மேம்படுத்த உதவுகின்றன. உயரத்தை அதிகரிக்கும் உணவுகள் உயரத்தை அதிகரிக்கும் உணவுகளான கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், லிவர், உருளைக்கிழங்கு, நட்ஸ், பாதாம், நிலக்கடலை, சிக்கன், பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கால்சியம் சத்துள்ள உணவுகள் ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன. தண்ணீர் காஃபைன், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும்; நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். முளைக்கட்டிய தானியங்கள் தானியங்களை அப்படியே சாப்பிடவதை காட்டிலும், முளைக்கட்டிய தானியங்களாக சாப்பிடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். முளைக்கட்டிய தானியங்கள் புரோட்டின் அதிகளவு உள்ளது. இந்த புரோட்டின் ஆனது உங்களது உடல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. யோகா மனஅழுத்தம், டென்ஷன் போன்றவை உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களைத் தடைசெய்யும். ஆனால், யோகா செய்யும்போது மனஅழுத்தம் நீங்கி, மனஅமைதி கிடைக்கும். யோகா பயிற்சியில் ஈடுபடும்போது, தசைகள், எலும்புகளுக்கு வேலை கொடுப்பதால், அதுவும் உடல் வளர்ச்சிக்கு உதவும். யோகாவிலேயே உயரத்தை அதிகரிப்பதற்கான சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இதையும் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு, பயிற்சி செய்யச் சொல்வது, குழந்தைகள் உயரமாக வளர உதவும். நேராக அமரவும் இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும். சூரிய ஒளி சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி கிடைக்கிறது. இந்த விட்டமின் டி ஆனது எலும்புகளின் வளர்ச்சிக்கு பயன்படுவதாக உள்ளது. காலை 8 மணிக்குள் விழும் சூரிய ஒளியானது உங்கள் மீது படுவது போன்று பார்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிகள் உங்களது உடலை உடற்பயிற்சிகள் செய்து திடமாக வைத்துக் கொள்வது என்பது உங்களது உயரத்தை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி தினமும் உடற்பயிற்சிகள் செய்வதால் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி மட்டுமில்லாமல் சில வகையான விளையாட்டுக்களையும் விளையாட வேண்டியது அவசியமாகும். சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல் போன்றவையும் உங்களது உயரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது என்பது உங்களது உயரத்தை அதிகரிக்க உதவும் ஒரு மிகச்சிறந்த வழியாகும். தினமும் 30-50 முறைகள் ஸ்கிப்பிங் குதிப்பது என்பது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும், உயரத்தை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். தொங்கும் பயிற்சி உயரமான கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கும் பயிற்சியானது உங்களது தசைகளை வலிமையடைய செய்ய உதவுகிறது. இந்த பயிற்சியை சிறுவயது முதலாகவே செய்து வந்தால் கண்டிப்பாக உங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். தூக்கம் நிம்மதியான ஆழந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பது என்பது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய ஒன்றாகும். எனவே சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திரிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் உடல் ஹார்மோன்கள் சமநிலையில் வேலை செய்யும். மருத்துவரின் ஆலோசனை நீங்கள் உயரமாக வேண்டும் என்று நினைத்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறலாம். இதன் மூலமாக சில இஞ்ச் வரையில் உங்களது உயரத்தை அதிகரிக்க முடியும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval