உடல் எடை குறித்த கவலை எல்லாருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. சரியான எடையில் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கலாமோ என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்க முடியது. தொப்பை, உடல் எடை அதிகரிப்பது ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன என்றால் அவற்றை தீர்க்கிறேன்,
குறைக்கிறேன் என்று களத்தில் குதித்து வேறு சில பிரச்சனைகளையும் உருவாக்கி வருகிறார்கள் என்பது தான் இங்கே சிக்கல். முன்னாடியெல்லாம் அதீத பசி என்று சொன்னால் பிரச்சனைக்குறிய விஷயமாக இருந்தது ஆனால் இன்றைக்கு பசியின்மை அந்த இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. #1 பசியெடுக்கவில்லை என்றால் உணவு சாப்பிடத்தோன்றாது. உணவு சாப்பிடவில்லை எனில் நம் உடல் எடை அதிகரிக்காது என்ற தவறான எண்ணத்தில் உணவு சாப்பிடாமல் தவிர்க்க முடிகிறதே என்று இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இது பெரும் தவறாகும். #2 நம் உடல் சீராக இயங்குவதற்கு எனர்ஜி தேவை, அந்த எனர்ஜி நாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவே கிடைக்கிறது.அதனால் பசியின்மை பிரச்சனைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். என்ன காரணத்தால் பசியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். #3 அளவுக்கு அதிகமன மன அழுத்தம் இருந்தால் உங்களுக்கு பசிக்காது. நம் வீடுகளில் கூட சொல்லக் கேட்டிருப்போம், அல்லது நாமே கூட செய்திருப்போம் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருப்பது இதனால் தான். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் மூளையிலிருந்து பல கெமிக்கல்கள் வெளியிடப்படும் அவற்றில் ஒன்று தான் அட்ரலீன். #4 அட்ரலீன் சுரப்பதால் உங்கள் இதயத்துடிப்பு வேகமாகும், செரிமானம் தாமதாகும். இதனால் பசியின்மை ஏற்படும். இவை சில மணி நேரங்களுக்கு மட்டுமே. இதுவே தொடர்ந்தால் அதாவது நீங்கள் நாள்கணக்கில் சோர்வுடன், மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பசியின்மை பிரச்சனை மறைந்து அதிக பசி ஏற்படும். #5 நீங்கள் சாப்பிடுகிற சில மருந்துகளின் பின் விளைவுகளினால் கூட உங்களுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக ஆண்ட்டிபயாடிக்ஸ், ஆண்டி ஃபங்கல்,மைக்ரேன்,ரத்த அலுத்தம்,பார்கின்சன் நோய் போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகள் பசியின்மையை ஏற்படுத்தும். #6 உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் உடலிலிருந்து சைடோகின்ஸ் என்ற கெமிக்கல் வெளியாகும். இது உங்களை சோர்வடையச் செய்வதுடன் பசியுணர்வை மட்டுப்படுத்தும். #7 கர்ப்பிணிகள் பலரும் சந்திக்கிற பிரச்சனை இது. முதல் ட்ரைம்ஸ்டரில் கர்பிணிகளுக்கு உணவு ஒவ்வாமை, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இது உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தினால் நிகழக்கூடியது தான். தொடர்ந்து அப்படியே விடாமல் திரவ உணவுகள், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். #8 நீங்கள் சாப்பிடக்கூடிய உணவை எனர்ஜியாக மாற்றுவதை கன்ட்ரோல் செய்வது உங்களது தைராய்டு சுரப்பி தான். இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் எனர்ஜி கிடைக்காது அதே சமயம் உணவு பயன்படுத்தப்படாததால் உங்களுக்கு பசியும் ஏற்படாது. உடல் எடை காரணமில்லாமல் அதிகரிக்கும். #9 உடலுக்குத் தேவைய ரத்த சிகப்பணுக்களை உருவாக்க முடியாத போதும் உங்களுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படக்கூடும். சிகப்பணுக்கள் தான் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. அவை போதுமான அளவு இல்லாத போது சோர்வாக உணர்வீர்கள். தலைவலி,மூச்சுவாங்குதல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படும். இந்த அறிகுறிகளுடன் சிலருக்கு பசியின்மை பிரச்சனையும் இருக்கும். #10 புற்றுநோய்க்காக ரேடியேசன் மற்றும் கீமோதெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பின்பற்றுவோருக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படும். அவர்களுக்கு உடலில் டீ ஹைட்ரேசன் கூட ஏற்படுவதுண்டு. இவர்கள் ஒரே நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் ஒரு நாளில் ஆறு முதல் எட்டு தடவையாக உணவை பிரித்து எடுத்துக் கொள்ளலாம். #11 பசியின்மைக்கு வயாதவது கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. வயதாவதால் உங்களுடைய ஜீரண உறுப்புகளின் செயல்பாடு குறைகிறது. அதோடு சுவையறியும் தன்மை, நுகரும் தன்மை ஆகியவையும் குறைவதால் உணவின் மீதான நாட்டம் உங்களுக்கு குறைந்திடும். #12 உடலின் சர்க்கரை அளவை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றால் அதாவது உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவை நம் உடலில் இருக்கும் நரம்புகளை பாதிக்கும். அப்படி பாதிக்கப்படுகிற நரம்புகளில் ஒன்று வேகஸ் என்கிற நரம்பு. இவை வயிற்றில் இருக்கும் தசைகளை கட்டுப்படுத்தக்கூடியது. இந்த நரம்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால் உணவு சரியாக கேஸ்ட்ரோ இன்ட்ஸ்டீனல் ட்ராக்ட்டுக்குச் செல்லாது. இதனால் பசியின்மை பிரச்சனை உண்டாகும். #13 வயிற்றில் பூச்சி இருந்தால் கூட பசியின்மை பிரச்சனை இருக்கும். பசியின்மை பிரச்சனையைத் தாண்டி வயிற்றுப் போக்கு,குமட்டல், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளும் இருக்கும். இது போன்ற நேரங்களில் உங்கள் உடலிலிருந்து அதிக நீச்சத்தும் வெளியாகும் என்பதால் உடலை வழக்கத்தை விட அதிக ஹைட்ரேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval