Wednesday, January 3, 2018

2 மாதத்தில் பூமியில் விழுகிறது கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்?

கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீனாவின் விண்வெளி நிலையமானது, இன்னும் இரண்டு மாதங்களில் விழக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாங்காங் ஒன்று, 2016ஆம் ஆண்டு விண்ணில் கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 525 அடி என்ற கணக்கில் அந்த விண்வெளி நிலையமானது பூமியை நோக்கி வருகிறது.
8.5 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையமானது, புவி ஈர்ப்பு விசைக்குட்பட்ட பகுதியில் வரும் போது அதிவேகத்தில் பூமியில் விழும்.
பிப்ரவரி மாத இறுதியில் புவியின் காற்று மண்டலத்தை அடைந்து, மார்ச் மாதத்திற்குள்ளாகவோ, அல்லது அதன் பின்னரோ இந்த விண்வெளி நிலையமானது பூமியில் விழும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். விண்வெளிமையம் கீழே விழும் போது முற்றிலும் எரிந்து சாம்பலாகவே விழும் என்றும் கூறப்படுகிறது.
வீடியோ 

courtesy;polimer News

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval