Thursday, January 18, 2018

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இன்று உலக நம்பர்1 இவர்தான்.

Image may contain: 5 people, people smiling, people standing
நாகை மாவட்டத்தில் செல்வமும், செல்வாக்கும்,
அறிவும், பணிவும் நிறைந்த
முஸ்லிம் கிராமங்கள் நிறைய உண்டு.
அதில் ஒன்று மயிலாடுதுறை அருகேயுள்ள கிளியனூர்.
இந்த குக்கிராமத்தில் பிறந்தவர்
Dr. முஹம்மது ரிழா.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில்
இன்று
உலக நம்பர்1 இவர்தான்.
சென்னை ஸ்டான்லியில் MBBS படித்த பின், அமெரிக்காவில் FRCS முடித்தார்.
தற்போது லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிகிறார். பிறந்த ஏழு நாளான ஒரு குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிட்சை செய்ததால் இவர் பெயர் கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது.
ஆரோக்கியமான கல்லீரலை இரு நோயாளிக்கு பிரித்து வழங்கும் முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக 100க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார்.
இதுவரை 1000 அறுவை சிகிச்சை நிறைவு செய்ததால் இவருக்கு சென்னை
ITC CHOLA GRAND ஹோட்டலில் இவருக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் துணை ஜனதிபதி, ஆளுனர், சுகாதாரத் துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.
நன்றி Abdul Azeez
courtesy;
சமுதாய நலமன்றம் மல்லிப்பட்டினம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval