கடந்த சில நாட்களாகவே கேரளாவின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள வீடுகளின் ஜன்னல்களில் வைர வடிவிலான கருப்பு நிற ஸ்டிக்கர்கள் மர்மமான முறையில் ஒட்டப்பட்டுள்ளதை கண்ட பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இந்த கருப்பு நிற வைர வடிவிலான மர்ம ஸ்டிக்கர்கள் முதலில் திருவனந்தபுரம் நகரின் ஒரு சில வீடுகளில் ஒட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது.
பின்னர் கொச்சி, தொடுபுழா போன்ற பகுதிகளிலும் குறிப்பாக தென் கேரள மாவட்டங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகிதை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் முதல்வர் பினராயி விஜயனின் கவனத்தையும் சென்றடைந்தது, இது தொடர்பாக சட்டசபையில் பேசியுள்ள முதல்வர் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளிலேயே இந்த மர்ம கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாகவும், குழந்தைகள் கடத்தல் கும்பலே இச்செயலின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தீவிர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு இதே போன்று வீடுகளில் மர்ம குறியீடுகள் இடப்படுவது கண்டறியப்பட்டது, அப்போது இது போன்ற மர்ம குறியீடுகள் இருந்தால் அதனை அழித்துவிடவேண்டும் என்று பத்தணம்திட்டா எஸ்.பி ஹரிஷங்கர் விளக்கமளித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது நினைவு கூறத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval