Wednesday, January 31, 2018

காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம்


இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதம் 15/16/17 தேதிகளில் காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம் (சோதனை ஓட்டம்) செல்ல ரயில்வே Safety Commissioner, அதிகப்பட்ச வேகத்தில் ( 110 KM ) , தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தபின்னர், மார்ச் மாத இறுதியில் பயணிகள் ரயில் ஓட தொடங்கும். அதன் பின்னர் சென்னை - பட்டுக்கோட்டை நேரிடையாக எக்பிரஸ் ரயில் சேவை தொடங்கும். இதற்கான முன் முயற்சியை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை M.S. தாஜுதீன்/ S.M.S அஸ்லம்/ முன்னால் சேர்மன் அஸ்லம்/ அப்துல் ரஜாக் ஆகியோர் சென்று சந்தித்து மனு அளித்தோம், அதன் பின் அமைச்சர் அவர்கள் 10 நாட்களில் ARDA அமைப்பிற்கு தபால் மூலம், ரூ 505 கோடி காரைக்குடி - பட்டுக்கோட்டை அகலப்பாதை வேலைகள் முடிக்க நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார். ஒரு சிறிய முயற்சி, இன்று செயல் வடிவம் பெற்றுள்ளது உண்மையியே மனதில் பெரும் சந்தோஷத்தை தருகிறது. இதன் மூலம் , வாலிபர்கள் ஆக்கப்பூர்வமாக, ஆர்வத்துடன் சமுதாய தொண்டுகளை மேற்கொள்ள வேண்டும்... இது போன்ற பொது சேவைகளை செய்ய அல்லாஹ் நம் எல்லோருக்கும் குறிப்பாக ரயில்வே வேளைகளுக்காக அரும்பாடு பட்ட ஜாஃபர் காக்கா அவர்களின் ஆரோக்கியத்திற்கும் து ஆ செய்யயும், நம் யாவருக்கும் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தயும் தந்தருல்வானாக ! ஆமீன் !

Abdul Razak

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval