Sunday, January 14, 2018

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

6 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்று ஆரத் தழுவினார்.
இஸ்ரேல் பிரதமருடன், தொழில்நுட்பவியலாளர்கள், வர்த்தகர்களைக் கொண்ட 130 பேர் குழுவும் வந்திறங்கியது. அனைவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள டீன் முர்த்தி நினைவிடத்தில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவும், பிரதமர் மோடியும், அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நேதன்யாஹூ பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேதன்யாஹூ சந்தித்து பேசுகிறார்
நேதன்யாஹூவின் இந்திய வருகையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதன்முறை என்பதால் நேதன்யாஜூவின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.




Polimer News

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval