டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆசியான் அமைப்பைச் சேர்ந்த மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளனர். இதுவரை நடந்த இந்திய குடியரசு தின விழாக்களில் 2 பேருக்கு மேல் சிறப்பு விருந்தினர்களை இந்தியா அழைத்ததில்லை.
இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விஐபி.,க்கள் அமரும் மேடை சுமார் 100 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval