Wednesday, January 10, 2018

லண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வியாபாரி சிறார்களால் அடித்துக் கொல்லப்பட்டார். #IndianOrigin

லண்டனில் சிகரெட் வழங்க மறுத்த இந்திய வியாபாரி சிறார்களால் அடித்துக்கொலை
லண்டனில் மில்ஹில் பகுதியில் இந்தியர் விஜய் பட்டேல் (வயது 49) கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை  கடைக்கு வந்த சிறார்கள் மூன்று பேர் சிகரெட் கேட்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டு சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. எனவே அவர்கள் 18 வயதானவர்கள் என்பதை நிரூபிக்கிற வகையில் ஆதாரம் எதையாவது காட்டுமாறு விஜய் பட்டேல் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் ஆதாரத்தை காட்டாமல் கோபம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள், விஜய் பட்டேலை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் விஜய் பட்டேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். 

“விஜய் பட்டேல் சட்டத்தை காக்கவேண்டும் என முயற்சி செய்து உள்ளார், ஆனால் அவருடைய உயிரை இழந்துவிட்டார்,”என போலீஸ் வேதனையுடன் தகவலை பகிர்ந்து உள்ளது.

சிறார்கள் விஜய் பட்டேலின் கை, நெஞ்சு மற்றும் தலை பகுதிகளியில் கொடூரமான முறையில் தாக்கிஉள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
பட்டேல் குடும்பத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று உள்ளார். அங்கு கடையை நடத்தி உள்ளார். அவருக்கு  2 குழந்தைகளின் தந்தை. இவரது மனைவி, விபா இந்தியா வந்துள்ள நிலையில் இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது. இதற்கிடையே விஜய் பட்டேலின் குடும்பத்துக்கு நல நிதி திரட்டும் வகையில் சமூக வலைத்தள பக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.  இதன்மூலம் 15 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.13 லட்சம்) திரட்டப்பட்டு உள்ளது. விஜய் பட்டேல் நண்பர்கள் பேசுகையில், மிகவும் இனிமையானவர், நேர்மையானவர், கடின உழைப்பாளி என குறிப்பிட்டு உள்ளனர். கடையில் வேலை பார்த்த நபரையும் சிறார்கள் தாக்கி உள்ளனர், அவரும் காயம் அடைந்து உள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீஸ் இரண்டு சிறார்களின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளது.
courtesy;Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval