தெலங்கானாவில் பெண் ஏ.எஸ்.பியுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளரை, பெண்ணின் உறவினர்கள் காலணியால் அடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி.யாக பணி புரிந்து வருகிறார் சுனிதா ரெட்டி. இவருக்கும் சுரேந்தர் ரெட்டி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. சுரேந்தர் ரெட்டி தற்போது லண்டனில் தொழில்நிறுவனம் நடத்தி வருகிறார்.
சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தின் கல்வகுருத்தி, காவல் ஆய்வாளரான மல்லிகார்ஜூனாவும், சுனிதா ரெட்டி கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை சுனிதாவின் கணவர் பலமுறை கண்டித்தும் அவர்கள் தொடர்பை விடவில்லை. இந்நிலையில், சுனிதாரெட்டியும், மல்லிகார்ஜூனாவும் தனியாக ஒரே வீட்டில் இருந்தபோது, அங்கு உறவினர்களை அழைத்து வந்த சுனிதாவின் கணவர், அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்.
பின்னர் உறவினர்கள் ஆய்வாளர் மல்லிகார்ஜூனாவை காலணியால் அடித்து துரத்தியதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்சமயம் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
கள்ளத் தொடர்பால் காவல் ஆய்வாளர் செருப்பால் தாக்கப்பட்ட சம்பவம், தெலங்கானா காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லிகார்ஜூனாவை செருப்பால் அடித்தது ஏ.எஸ்.பி சுனிதா ரெட்டியின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval