மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிகழ்ந்த வன்முறையின்போது, தலித் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் உருவான கலவரம், மும்பை நகருக்கும் பரவியது. மும்பையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் 40க்கும் அதிகமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பேருந்துகள் மற்றும் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டதாக, நூற்றுக்கும் அதிகமானோரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, புனேவில் நடைபெற்ற போரில் ஒரு பிரிவினர் வெற்றிப் பெற்றனர். இதன் 200வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின்போது, இந்த கலவரம் ஏற்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மும்பை உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புனேவின் கோரேகான் கலவரம் தொடர்பாக பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநில மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், நீதிபதி ஒருவர் தலைமையில் நீதிவிசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வன்முறையில் பலியானவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், அனைத்து அரசியல் கட்சியினரும், தமக்கு ஆதரவு தருமாறும் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, கோரேகான் கலவரத்துக்கு மாநில அரசே காரணம் என கூறி, தேவேந்திர பட்னாவிஸ் வீடு முன்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval