Tuesday, January 16, 2018

அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் -படித்ததில் பிடித்தது

Image may contain: 5 people, people smiling
அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் . தயவு செய்து இப்பதிவை படித்தப்பின் முடிவை மாற்றிகொள்ளவும்..இன்று மாட்டுப்பொங்கல் . திருவண்ணாமலை நகரிலும் அனேக தனியார் மருத்துவமனைகளும் விடுமுறை. 8 வயது குழந்தை மதியம் இரு நாணயங்களை முழங்கிவிட்டது.பெற்றோர்க்கும் முதலில் தெரியவில்லை.குழந்தை மதிய உணவை முழுங்க முடியாமல் தவிக்க இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு பதற்றத்துடன் வர உரிய பரிசோதனை செய்து உடனடியாக காது மூக்கு தொண்டை பணிமருத்துவர் மரு ராஜசெல்வம் மயக்குனர் மரு திவாகர் பணிசெவிலியர் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு இரு நாணயங்களை அகற்றி விடுமுறை நாளாக இருந்தாலும் சீரிய பணியாற்றி குழந்தையை காப்பாற்றி பெற்றோரின் பெரும் பதற்றத்தை தனித்துள்ளனர். இப்பணியை மாவட்ட அரசு மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (SDPGA) அனைவரையும் பாராட்டி மகிழ்ச்சி கொள்கிறது. சில குறைகள் இருந்தாலும் மக்களின் பங்களிப்பு ஒத்துழைப்பு அதிகரித்தால் மாநிலத்திலேயே ஒரு சிறந்த மருத்துவமனையாக நம் மருத்துவமனை உருவாகும் .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval