Tuesday, January 9, 2018

கோடி கோடியாக கருப்பு பணத்தை கடத்திய விமான பணிப்பெண்.. பல நாளாக நடந்த வேற லெவல் மோசடி!

என்ன நடந்தது
டெல்லி: இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை முறைகேடான வகையில் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அதை நல்ல பணமாக மாற்றுவார்கள். 'மணி லாண்டரி' என்றழைக்கப்படும் இந்த மோசடி இந்திய பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் கருப்பு பணம் நன்கொடை என்ற பெயரில் மீண்டும் நல்ல பணமாக நாட்டிற்கு திரும்பி வரும். ஆனால் சிவாஜி படத்தில் கட்டுவது போல அவ்வளவு எளிதாக கருப்பு பணத்தை வெளிநாட்டிற்கு கொண்டு சென்றுவிட முடியாது. பல சோதனைகள் இதில் செய்யப்படும். ஆனால் இதில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி கும்பல் ஜெட் ஏர்வேசின் விமான பணிப்பெண்னை பயன்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது ஜெட் ஏர்வேஸில் இருக்கும் 'தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா' என்ற பெண் ஹாங்காங்கில் இருக்கும் மாபியா கும்பல் ஒன்றுடன் தொடர்பில் இருந்துள்ளார். இங்கிருந்து கருப்பு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அங்கு எடுத்து சென்று கொடுப்பதுதான் இந்த பெண்ணின் வேலை. இதற்கு இந்த பெண்ணிற்கு தனியாக பணம் கொடுக்கப்படும். தலைவன் ஹாங்காங்கில் இருக்கும் மாபியா கும்பல் தலைவன் அமித் மல்ஹோத்ராதான் அந்த பெண்ணிடம் இந்த டீலிங்கை பேசி இருக்கிறான். இந்த பெண் கொண்டு வரும் பணத்தை அப்படியே தங்கமாகவோ, டாலராகவோ மாற்றி இந்தியாவிற்கு நன்கொடை என்ற பெயரில் அனுப்பிவிடுவான். யார் கருப்பு பணம் அனுப்பினார்களோ அவர்களுக்கு பணம் சரியாக மீண்டும் சென்றுவிடும். சிக்கினார்கள் இது பல நாளாக நடந்து இருக்கிறது. ஆனால் நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் செல்ல தயாராகி இருந்த போது திடீரென சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் தேவ்ஷி பணம் கடத்தியது கண்டுபிடிக்கப்ட்டது. உடனடியாக அந்த பெண் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கோடி இவர் ஒவ்வொரு முறை 10 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்து சென்றுள்ளார். இதுவரை கோடிக்கணக்கில் இவர் பணத்தை மாற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய உடையில் மறைத்து இவர் பணத்தை கடத்தி இருக்கிறார். பணிப்பெண் என்பதால் பெரிய சோதனை இல்லாமல் இவ்வளவு நாள் தப்பித்துள்ளார்.
courtesy;One India

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval