தமிழகம் முழுவதும் ஒரு வாரம் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சுமார் 190 போலி டாக்டர்கள் பிடி பட்டதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (டிஎம்எஸ்) இயக்குநர் சந்திரநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் போலி டாக்டர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (டிஎம்எஸ்), மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். போலி டாக்டர் களை கண்டுபிடிப்பதற்காக ஒவ் வொரு மாவட்டத்திலும் சுகாதார இணை இயக்குநர், மருந்து கட்டுப் பாட்டு ஆய்வாளர் மற்றும் போலீ ஸார் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி சுமார் 190 போலி டாக்டர்களை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து முறையான உரிமம் இல்லாத மருந்து, மாத்திரை களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாதந்தோறும் சோதனை
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (டிஎம்எஸ்) இயக்குநர் சந்திரநாதன் கூறும்போது, ‘‘கடந்த மாதம் நடத்தப் பட்ட சோதனையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 6 பேர் வரை என மொத்தம் 190 போலி டாக்டர் கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடு பட்டுள்ளனர். இதேபோல் ஒவ் வொரு மாதமும் சுகாதார இணை இயக்குநர் தலைமையிலான குழு வினர் போலி டாக்டர்களை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபடுவர்” என்றார்.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அப்துல் காதர் கூறும்போது, ‘‘போலி டாக்டர்களை கண்டறியும் குழுவில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களும் உள்ளனர். பிடிபடும் போலி டாக்டர் கள் வைத்துள்ள உரிமம் இல்லாத மருந்து, மாத்திரைகளை இந்த ஆய்வாளர்கள் கைப்பற்றுவர்” என்றார்.
பொது சுகாதாரத்துறை இயக்கு நர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி கூறிய தாவது: தமிழகத்தில் போலி டாக்டர் கள் ஒழிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இன்னும் போலி டாக்டர் கள் முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. டெங்கு காய்ச்சல் தீவிர மடைந்ததற்கு முக்கிய காரணம் போலி டாக்டர்கள்தான்.
காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்று வருபவர்களுக்கு தேவை யில்லாமல் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் போட்டுவிடுகின்றனர். தங்கள் விருப்பப்படி மருந்து, மாத்திரை எழுதிக் கொடுக்கின்ற னர். இதனால் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்தால் சுயமாக கடைக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval