பேட்டரி பிரச்னை இல்லாமல் செயல்படும் ஹைட்ரஜன் செல்போன்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
செல்போன்கள் இல்லாத கணத்தை நம்மால் கற்பனை கூட செய்யமுடியாத நிலையில்,செல்போன்கள் இன்று நம் உற்ற நண்பனாக மாறிவிட்டன.நாம் தொடர்ச்சியாக செல்போன்களை பயன்படுத்தும் போது சில நேரங்களில் அவற்றின் பேட்டரி தீர்ந்து விட்டால் நாம் செய்வதறியாது தடுமாறும் கணங்களும் உண்டு.
எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்களை தவிர்ப்பதற்காக,பிரிட்டனை சேர்ந்த இன்டலிஜென்ட் எனர்ஜி நிறுவனம் தனது முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
ஹைட்ரஜன் காஸ் கொண்ட குப்பியை ஆப்பிள் நிறுவன செல்போனுடன் இணைத்து அதன் செயல்பாட்டை கூர்மையாக அவதானித்து வந்தனர்.அதன் முடிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட செல்போன் மின்சார உதவி இல்லாமல் பல மாதங்கள் தொடர்ச்சியாக ஹைட்ரஜன் காஸ் உதவியுடன் செயல்பட்டுள்ளது.
இது வெற்றி பெரும் சந்தர்ப்பத்தில் மின்சாரம் இல்லாமலே, பேட்டரி சார்ஸ் செய்யப்படாமலேயே பல மாதங்களுக்கு தொடர்ச்சியாக நாம் செல்போனை நாம் பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval