Friday, October 30, 2015

உலகின் மிகப்பெரிய செயற்கை பனிப்பூங்கா அபுதாபியில் அமைகிறது

Iceworld
யுஏஇ தலைநகர் அபுதாபி அருகே ரீம் தீவில் உலகின் மிகப்பெரிய மிகபெரிய உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா ரீம் மாலில் அமைய உள்ளது. 2018ல் திறக்க திட்டமிட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் 85 உணவகங்களும், 450 கடைகளும் அமைய உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா மிகவும் ரம்மியமானமுறையில் திகழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திர்ஹம்ஸ் 3.7 பில்லியன் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம் உலகம் முழுவதும் உள்ள சுற்றலா பயணிகளை கவரும் என முதலீட்டார்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் 2005ல் திறக்கப்பட்ட மால் ஆப் எமிரேட்ஸ் வணிக வளாகத்தில் ‘ஸ்கை துபாய்’ என்ற‌ மிகபெரிய செயற்கை பனிசறுக்கு உள் விளையாட்டரங்கம் அமைந்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகபெரிய பனிச்சறுக்கு உள்ளரங்குகளில் ஒன்றாக திகழ்வது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval