Friday, October 23, 2015

பணியில் சேர்ந்த 3வது நாளில்ரூ.50 லட்சத்துடன் ஓட்டம்


பெங்களூரு,:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் சேர்ந்த, மூன்றாவது நாளிலே, 50 லட்சம் ரூபாயுடன் ஊழியர் தலைமறைவானார்; போலீசார், அவரை தேடி வருகின்றனர்.பெங்களூரு, நந்தினி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21; இவர், கடந்த 19ம் தேதி, ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
மூவருடன் வேனில்...கடந்த, 21ம் தேதி காலை, நகரில் உள்ள, ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்ப, மகேஷ் உடன் பாதுகாவலர், நிறுவன ஊழியர் என, இருவர், ஒரு கோடி ரூபாயுடன் வேனில் சென்றனர்; வேனை, டிரைவர் ஓட்டிச் சென்றார்.பணப்பெட்டியின் சாவிமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில் இருந்த, ஏ.டி.எம்., மையத்தில் பணத்தை நிரப்ப, இரு ஊழியர்கள் பணத்துடன் இறங்கி சென்றனர். 
வேனில் இருந்த மகேஷிடம், பணப்பெட்டியின் சாவியை கொடுத்து சென்றனர்.அவர்கள் சென்ற சில நிமிடங்களில், வேனிலிருந்து அவசரமாக இறங்கிய மகேஷ், சிறுநீர் கழித்து வருவதாக, டிரைவரிடம் கூறி வேகமாக சென்றார். நீண்ட 
நேரமாகியும் அவரை காணாததால், சந்தேகமடைந்த ஊழியர்கள், பணப்பெட்டியை திறந்து பார்த்தனர். மொபைல் போன் துண்டிப்புஅதில், தலா, 10 லட்சம் ரூபாய் அடங்கிய, ஐந்து பாக்கெட்டுகளை காணவில்லை; மகேஷின் மொபைல் போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. பணத்துடன், அவர் தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.
இந்த நுாதன கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval