வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொண்டு வர அனுமதிக்கப்படும் உடமைகளுக்கான மதிப்புத் தொகையை மத்திய அரசு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை 5 லட்ச ரூபாய் வரையான மதிப்பிலான பொருட்களை உடமையாக கொண்டு வரலாம் என்றிருந்த விதிமுறையை தளர்த்தி, 20 லட்சமாக அதிகரித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியா வரும் வெளிநாட்டினர் சந்திக்கும் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 20 லட்சம் ரூபாய் வரையான மதிப்பு வரை பொருட்களுடன் வரும் பயணிகள் மீது சுங்கத் துறை விசாரணை மற்றும் வழக்குப் பதிவு ஆகியவை இருக்காது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு மட்டுமே விசாரணை நடத்தப்படும். அதேநேரம் கள்ளநோட்டு, ஆயுதங்கள், வெடிமருந்து மற்றும் அரிய உயரினங்கள் கடத்தி வரப்பட்டு பிடிபட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval