Tuesday, October 13, 2015

ஜி‬.டி.நாயுடு

gdnaidu
ஜி‬.டி.நாயுடு அவர் ஒருதரம் சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தாராம். உள்ளே போகிறவர்களை எல்லாம் யாரு, என்ன படிப்புத் தகுதி என்ன என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது.நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி விட்டார்களாம்.
ஏன் என்று கேட்டதற்கு எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றார்களாம்.
நாயுடு எதுவும் பேசவில்லை.அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.
இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அச்சசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம்.அத்துடன் அவர் அனுப்பியிருந்தகடிதத்தில்,“என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது.ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval