டெல்லி அரசு பஸ்களில் இலவச வைபை வசதியை முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லியில் பொது மக்கள் அதிக அளவில் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்து கொடுக்கப்படும் என கடந்த தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இதை நிறைவேற்றும் வகையில் டெல்லி அரசு பேருந்துகளில் இலவச வைபை திட்டத்தை நேற்று முதல் ஆம் ஆத்மி அரசு தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடங்களில் இயங்கம் பேருந்துகளிலும், முத்ரிகா, நரேலா செல்லும் பஸ்களிலும் வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார். இது முற்றிலும் பயணிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதனை டெல்லி போக்குவரத்து கழக செய்தி தொடர்பாளர் டாக்டர் ஆர்.கே.மினாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். படிப்படியாக இந்த திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவு படுத்தப்படும் எனவும், இலவச வைபை சேவை அளிப்பதற்காக நிறுவனம் டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval