Monday, October 5, 2015

பெட்ரோலை ‘காஸ்’ ஆக மாற்றும் கருவிகண்டுபிடிப்பு

01
வாகன புகை மூலம் காற்றில் நச்சு கலந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், ‘ப்யூவல் ஆட்டோமேஷன் சிஸ்டம்’ – எப்.ஏ.எஸ்., முறைப்படி, பெட்ரோலை, ‘காஸ்’ ஆக மாற்றும் கருவியை, சிவகங்கை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
சிவகங்கை, மதுரை சாலையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற தாசில்தார் ஞான பண்டிதன் மகன் கண்ணன், 23; சென்னை தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்துள்ளார். துாத்துக்குடி தனியார், ‘தெர்மல் பவர் புரொடக் ஷன்’ நிறுவன உதவி பொறியாளராக உள்ளார்.இவர், பணிக்கு இடையே, ப்யூல் ஆட்டோமேஷன் சிஸ்டம் – எப்.ஏ.எஸ்., முறைப்படி, பெட்ரோலை காஸ் ஆக மாற்றி, பெட்ரோலை சேமிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:உலகில் உள்ள வாகனங்கள், ஒரு நாள் வெளியிடும் புகையின் அளவு, ஒரு ஹைட்ரஜன் குண்டு வெடிப்பிற்கு சமம். பெட்ரோலை மிச்சப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்காத விதத்தில், ‘வேபர் பிரஷர் விதிப்படி’ இயங்கும் புதிய கருவியை கண்டறிந்தேன். வாகன பெட்ரோல், ‘டேங்கில்’ இருந்து, ‘வேக்குவம் சேம்பர் கன்ட்ரோலுக்கு’ ஒரு டியூப் இணைத்து, டேங்கில் இருந்து வரும் பெட்ரோல், வேக்குவம் சேம்பருக்குச் செல்கிறது. அதில் உள்ள வெற்றிடம், பெட்ரோலை காஸ் ஆக மாற்றுகிறது. இக்கருவியுடன் வாகனம் ஓட்டினால், 40 சதவீத புகை குறையும்; அதோடு, பெட்ரோல் செலவும் 30 சதவீதம் குறையும். எரிபொருள் சேமிப்புடன், காற்றில் மாசு ஏற்படுவதையும் குறைத்து, சுற்றுச்சூழலை காக்கலாம்.சோதனை அடிப்படையில், என், 125 சி.சி., டூவீலர், இக்கருவியின்றி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 40 கி.மீ., துாரம் சென்றது. கருவி பொருத்திய பின், அதே பெட்ரோல், 52 கி.மீ., துாரம் வரை செல்வதை உறுதி செய்தேன்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளேன். இதை பொருத்த, 3,000 ரூபாய் செலவாகும். வணிக ரீதியாக சென்றால், செலவு குறையும். இந்த ஆராய்ச்சிக்கு, என் நண்பர் லோகேஷ் உதவி புரிந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.இவரை, 99628 78287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval