மஸ்கட்: பாகிஸ்தானை சேர்ந்தவர் பைசல் ரசா இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது மகள் பஸ்மா இக்குழந்தைக்கு கல்லீரலில் பாதிப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தான் வசிக்கும் ஓமனிலும் ,பாகிஸ்தானிலும் இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதி இல்லை என தெரிய வந்தது .சென்னையில் உள்ள மருத்துவமனையில் இதற்கான வசதி இருப்பதை அறிந்த பஸ்மாவின் குடும்பத்தினர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெறுவதகான அனுமதியை பெற்றிருந்தனர்.
அதனடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு விசா வழங்க கடிதம் அனுப்பியது. தூதரக அதிகாரிகள் அனைத்து சான்றிதழ்களையும் பரிசோதித்து இந்திய வெளியுறவுத்துறையின் அனுமதி பெற்று சிறுமி மற்றும் குடும்பத்தினருக்கு விசா வழங்க ஏற்பாடு செய்தனர். விசா கிடைக்க பெற்ற சிறுமியின் தந்தை முஹம்மது பைசல் கூறியதாவது, விரைவில் சென்னை செல்ல உள்ளேன். விரைவான முறையில் விசா வழங்கிய இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் சென்னை மருத்துவர்கள் உதவியோடு என் மகளை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval