* புகை பிடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றது. பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் சிகரெட் மூட்டு வலி சர்க்கரை நோய் 2 இவற்றுடனும் தொடர்பு உடையது. அதிக சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் 2 வகை ஏற்படும் வாய்ப்பு வெகுவாய் அதிகரிக்கின்றது.
* புகை பிடிப்பவர்களின் எலும்பு அடர்த்தி அதிகம் குறைந்து விடுகின்றது என ஆய்வுகள் உறுதி செய்கின்றன. புகையிலையில் உள்ள ரசாயனங்களில் பல புற்று நோய் உருவாகக் காரணமாகின்றன.
* புகையிலை உள்ள ரசாயனம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
* ரத்தக் குழாய்களை விரிந்து வெடிக்க வைத்து இறப்பினை ஏற்படுத்துகின்றது.
* இருதய ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன.
* மாரடைப்பு ஏற்படுகின்றது.
* நெஞ்சு வலி என அநேக புகை பிடிப்போர் கூறுவர்.
* ரத்த அழுத்தம் கூடுகின்றது.
* பக்க வாதம் ஏற்படுகின்றது.
* நுரையீரலில் காற்றுக் குழாய்கள் அடைப்பட்டு மூச்சு விடுவது கடினமாகின்றது. நெஞ்சு இறுகும் உணர்வு ஏற்படும். ஒருவர் புகை பிடிப்பதால் அவர் அருகில் இருப்பவருக்கும் பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன. அவர்களின் இறப்பு சீக்கிரமே ஏற்படுகின்றது. இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவம், குறைந்த எடையுடைய குழந்தை என பாதிப்பு ஏற்படுகின்றது. சிறு குழந்தைகளுக்கு காதில் கிருமி, நிமோனியா, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. புகையிலையில் உள்ள நிகோடின் வாயின் வழியாக ரத்தினை அடைந்து நொடிகளில் மூளைக்குச் செல்லும். இது தொடரும் பொழுது விட முடியாத பழக்கமாக மாறும்.
ஒருவர் புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பித்தவுடன் ஏற்படும் உடனடி பலன்கள் :
* இருதய துடிப்பும், ரத்த அழுத்தமும் புகை பிடிப்போருக்கு முறையற்று அதிகமாகவே இருக்கும்.
புகை பிடிப்பதை நிறுத்திய உடனேயே அவை உரிய அளவுக்கு இறங்கத் தொடங்கும்.
* புகையினால் ரத்தத்தில் அளவிலுள்ள கார்பன் மோனாக்ஸைட் நச்சு குறையத் தொடங்கும்.
* புகை பிடிப்பதனை நிறுத்திய ஒரு சில வாரங்களிலேயே ரத்த ஓட்டம் சீர்படும். பச்சை நிற சளி குறையும், ஆஸ்துமா, இருமல் தாக்குதல் வெகுவாய் குறையும்.
* புகை பிடிப்பதனை நிறுத்திய சில மாதங்களில் நுரையீரல் செயல் திறன் அதிகரிக்கும்.
* புகை பிடிப்பதனை நிறுத்திய ஓரிரு வருடங்களிலேயே புற்று நோய் தாக்கும் அபாயம் குறைந்து விடும். புகை பிடிப்பதனை நிறுத்திய சில காலங்களில் இளவயதில் இறப்பு புற்று நோய் தாக்குதல், இருதய நோய் தாக்குதல் நீங்கி ஆயுள் நீடிக்கும்.
புகை பிடிப்பதனை எப்படி நிறுத்தலாம்:
* புகை பிடிப்பதனை நிறுத்த ஆரம்பிக்கும் பொழுது ஓய்வு நேரத்தில் தனியாக இருக்காதீர்கள். உங்களுக்கு உதவுபவர்களுடனேயே இருக்கும். கோவில், சினிமா, நூலகம், உணவு விடுதிகள் என்று இருங்கள்.
* அதிக நீர் குடியுங்கள். நல்ல உணவு உண்ணுங்கள், நன்கு தூங்குங்கள்.
* காபி, டீயினைக் கூட குறைத்து விடுங்கள்.
* பழவகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* சிக்லெட் மெல்லுவது சிபாரிசு செய்யப்படுகின்றது. ஆனால் அதுவும் பழக்கம் ஆகி விடக் கூடாது.
* புது விளையாட்டு ஏதேனும் பழகுங்கள்.
* புகை பிடித்தலால் ஏற்படும் வீடியோ படங்களை தினமும் பாருங்கள்.
* பிராளுயாமம் பழகுங்கள்.
* நடை உடை பயிற்சி அவசியம்.
* ஒரே ஒரு சிகரெட் பரவாயில்லை என்ற சபலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval