பாலி: மத்திய போலீசாரால் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இன்று (27 ம்தேதி ) இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டார் . இந்த கைதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது .
மும்பை குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல், கொலை வழக்குகளி்ல் தொடர்புடையவர் சோட்டா ராஜன் (வயது 55). இவர் பிரபல தாவூத் இப்ராகீமிடம் கூட்டாளியாக இருந்து பல கிரிமினில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் .
போலீசாரிடம் இருந்து தப்பிக்க இவர் சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்தார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு விமானம் மூலம் வந்தார் . இவரை அந்நாட்டு போலீசார் சந்தேகத்திற்குகிடமாக நிறுத்தி விசாரித்தனர். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர். இத்தகவல் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது .இதனையடுத்து சோட்டாவை இந்தியா கொண்டு வர மத்திய படை போலீசார் இந்தோனேஷியா கிளம்பவுள்ளனர் .
courtesy; Dinamalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval