Monday, October 26, 2015

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

afghanistan_pakistan_quake_
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலையை ஒட்டிய ஜார்க் என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன.
ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் கடுமையாக இருந்தது. பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வடகிழக்கு பாகிஸ்தானின் கைஃபர், பக்தூன்கவா மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஸ்வாட் என்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மிர்பூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளான். சில இடங்களில் வீடுகளின் மேற்கூறை இடிந்து விழுந்தும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இங்கே தமிழ் மேட்ரிமோனியில் இலவச பதிவு செய்ய முடியும்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval