Thursday, October 15, 2015

ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை!

Kesehatan15
நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரமாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. நாம் ஏன் சில எளிய வழி முறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக்கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா? இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழி முறைகளை கொடுத்துள்ளோம்.
மீன் சாப்பிட வேண்டும்
ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணெய் மிகுந்த மீன்களை வாராந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்கமுடியும். நாம் 3 வயதை அடையத் தொடங்கிய நாள் முதல், மூளையின் அளவு சுருங்கத் தொடங்கி, மனரீதியாக தளர்வு ஏற்படத் தொடங்கும்.
நண்பர்களை அருகில் வைத்திருங்கள்
நல்ல நண்பர்களை அருகில் வைத்திருப்பது தான் 100 வயது வரை வாழ்வதற்கான சாவி’என்று ஆஸ்திரேலியாவில் 100 வயதை அடைந்தவர்களிடம் செய்த ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது. ஏனெனில், நண்பர்கள் மனரீதியான ஆதரவை அளிப்பதால், மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களின் உடலில் நன்றாக இருப்பதற்கான வேதிப்பொருட்களான டோபாமைன் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகியவை உருவாக உதவுகிறது. மேலும், இதன் காரணமாக மூளையின் வளர்ச்சி மேம்பட்டு, முதுமையும் தள்ளிப்போகிறது.
ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்கள்
ஆப்பிள்கள், குறிப்பாக ஆப்பிள்சாறு மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்று அல்சைமர் நோய் பற்றிய பத்திரிக்கை (Journal of Alzheimer’s Disease) நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 2 கப் ஆப்பிள்சாறு அருந்துவதன் மூலம் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளைகளில் ஏற்படும் கறைகள் குறைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளைக்கு வேலை
சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றை செய்து வருவதால் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்
சரு மத்திற்கு காய்கறிகளும், பழங்களும் வான வில்லின் வர்ணங்களில் ஜொலிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் எண்ணற்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. செயின்ட் ஆண்டு ரூஸ் பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நெடுநாட்களுக்கு ஆரோக்கியமான சருமம் இருப்பதாகவும் மற்றும் அவை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பைக்கு பால் அவசியம்
முழுமையான கொழுப்பு நிரம்பிய பாலை தினமும் குடித்து வந்தால் போதும், பெண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மை 25 சதவீதம் குறைந்துவிடும் என்று ஹார் வார்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஏனெனில், பால்பொருட்களில் உள்ள கொழுப்பு கருப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். காலை நேர உணவுடன், ஒரு கப் பாலை தினமும் சேர்த்துக் கொள்வதும், ஒரு கப் தயிர் மற்றும் பாலாடைக்கட்டியில் ஒரு சிறுதுண்டு ஆகியவற்றையும் உணவுடன் சேர்த்துக்கொள்வது நலம் தரும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பெண்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் அவர்களுடைய கருத்தரிக்கும் தன்மையை குறைப்பதற்கும் மன அழுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியாகும் அளவை குறைத்து, லிபிடோவையும் குறைத்து விடுகிறது. எனவே, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள, தினமும் 10 நிமிடமாவது ரிலாக்ஸாக டிவி பார்த்தல் அல்லது படித்தல் போன்ற பொழுது போக்குகளை செய்து வாருங்கள்.
தொப்பை
சாதாரணமாக உடற்பயிற்சி செய்வதை விட, இசையை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் போது கணிசமான அளவு எடை அதிகமாக குறைகிறது என்று கனடாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இசையை சேர்த்துக்கொண்டு, அதீத சக்தி தரும் பாடல்களை iPod அல்லது mp3 பிளேயரில் போட்டுக் கேளுங்கள். மேலும், நீங்கள் ஜிம்முக்கு செல்பவராக இருந்தால் அல்லது வாக்கிங் மட்டும் செல்பவராக இருந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே அவற்றை செய்யுங்கள்.
பொட்டாசியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்
பொட்டாசியம் உடலின் நீர்மத்தை சம நிலை செய்யவும் மற்றும் தேவையற்ற வகையில் வயிறு உப்புசமடைவதையும் குறைக்க உதவுகிறது. அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுகளாக வாழைப்பழம், பரங்கிக்காய், மாம்பழம், கீரைகள், தக்காளி, நட்ஸ் மற்றும் தண்ணீர் விட்டான் கொடி ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இவற்றில் உள்ள அஸ்பாரகின் என்ற அமினோ அமிலம், நமது உடலில் அதிகமாக உள்ள நீர்மங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஓய்வு தேவை
யோகாசனம் அல்லது தியானம் போன்ற ஓய்வுநிலை உடற்பயிற்சிகள், கடினமான உடற்பயிற்சிகளான ஓட்டம் அல்லது ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விட அதிகமான கலோரிகளை எரிப்பதாக அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த எளிய உடற்பயிற்சிகள், நம்மை அதிகமாக சாப்பிடத் தூண்டும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை குறைத்திட உதவுகின்றன.
பாதத்திற்கேற்ற பந்து சிகிச்சை(Tryballtherapy)
ஒரு டென்னிஸ் பந்தின் மேலாக உங்களுடைய பாதத்தை வைத்து, சுழற்றிக் கொண்டிருந்தால் பாதம் மசாஜ் செய்யப்பட்டு, இரத்த ஓட்டம் உந்தப்படும் மற்றும் இறுக்கமான அல்லது வலி தரும் வகையில் உள்ள தசைகள் ஓய்வு நிலைக்கு திரும்பும். இன்னும் சற்றே தீவிரமான பலன் வேண்டுமென்றால், கோல்ஃப் விளையாடும் பந்தை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இதே செயலை செய்யவும். இதனை தினமும் திரும்பத் திரும்ப செய்து வந்தால், பிளான்டர் பேஸ்சியா என்ற மிகவும் பரவலான ஆனால் மிகவும் வலி தரக்கூடிய எரிச்சல் தரும் நிலையிலிருந்து உங்களுடைய பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கண்களுக்கும் தேவை நிழல்
நீங்கள் எவ்வளவு அதிகமாக சூரியனின் புறஊதாக்கதிர்களால் நேரடியாக தாக்கப்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய கண்களிலுள்ள விழித்திரையில் அதிகமான சேதம் ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு வயது ஏற ஏற, கண்புரை மற்றும் வயது-சார்ந்த மாகுலர் திசு-செயலிழப்பு (AMD)போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளியிடங்களில் நேரத்தை செலவிடும் போது சூரிய ஒளிக்கண்ணாடிகளை அணியுங்கள். குளிர்காலங்களிலும், மேகமூட்டமாக இருக்கும் நேரங்களிலும் கூட புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும்.
கண்களுக்கான தினசரி பயிற்சிகள்
இங்கு தரப்பட்டுள்ள எளிமையான டெக்னிக்கை பயன்படுத்தி உங்களுடைய கண் தசைகளுக்கு பயிற்சியளித்து வந்தால், கண்களிலுள்ள அழுத்தம் குறைந்து தலைவலி மற்றும் கண்வலி போன்றவை குறையும்.
இதோ அந்தபயிற்சி
உங்களுடைய கண்களுக்கு முன், 10 அடி தூரத்தில் பெரிய அளவில 8 என்ற எண் உள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த எண்ணை ஒரு பக்கமாக சாய்த்து, அந்த வடிவத்தை உங்களுடைய கண்களால் வரைய முயற்சி செய்யுங்கள், மெதுவாக. இவ்வாறு சில நிமிடங்களுக்கு செய்து வரவும்.
மூக்கு
நீங்களாகவே செய்யக்கூடிய இந்த வழி முறையைப் பயன்படுத்தி சைனஸ் அழுத்தம் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் காணுங்கள். எப்படியெனில் உங்களுடைய நாக்கை அதன் மேல் பகுதியை எதிர்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து, கண்ணிமைகளில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தவும். மூக்கின்து வாரங்கள் வழியாக வாய்க்கு செல்லும் வோமர் எலும்பில், அடைப்புகளை இலக்கி, நீக்க இந்த வழிமுறை உதவும். அதிலும் 20 நொடிகள் இவ்வாறு செய்து பாருங்கள், சைனஸ் தொல்லை இல்லாமல் போகும்.
‘சத்தங்களுக்கு தேவை கட்டுப்பாடு’
நாம் பிறக்கும் போது இயக்கம் பெறும் காதுகள்,கடைசி வரையிலும் நம்முடைய பிரதான உணர்வு உறுப்பாக உள்ளது. வயது ஏற ஏற, நமது மூளைக்கு ஒலியை கொண்டு செல்லும் நரம்புகள் சேதமடையவும், பலவீனமாகவும் துவங்குகின்றன. எனினும், நாம் கேட்கும் ஒலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இந்த சேதத்தின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும்.அதாவது,அமைதியைவிரும்புங்கள்.
சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதல்
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணி நேரம் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச்சென்றால், அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதயவலி போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval